இடுகையின் பெயர் | இடுகையுடன் தொடர்புள்ளவை |
---|---|
தந்தை | சின்னச்சாமி ஐயர் |
தாய் | இலக்குமி அம்மாள் |
தோற்றம் | 11-12-1882 |
மனைவி | செல்லம்மாள் |
இயற்பெயர் | சுப்பையா |
பிறந்த ஊர் | எட்டையபுரம் |
மறைவு | 11-09-1921 |
- பாரதியார் தன் தந்தை சின்னசாமி ஐயரிடம் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகியவற்றைக் கற்றார், மேலும் வடமொழி, இந்தி, பிரெஞ்சு ஆகிய பல மொழிகளையும் கற்றார்.
- பல மொழிகளை கற்று பாரதி "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவ தெங்கும் காணோம்".
- செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்றும் பாடல்களைப் பாடினார்.
- இளம் வயதில் கவிபாடும் பெற்றிருந்ததால் தம் 11-ஆம் வயதில் பாரதி என்னும் பட்டம் பெற்றார்.
- மதுரை சேதுபதி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார்.
- மதுரையில் 'விவேக பானு' என்னும் நாளேட்டில் 'தனிமை இரக்கம்' என்னும் பாரதியின் பாடல் முதன்முதலாக வெளி வந்தது.
- பாரதியின் அரசியல் குரு திலகர் ஆவார்.
- 1904ஆம் ஆண்டு சென்னை 'சுதேசமித்திரன்' நாளிதழில் துணை ஆசிரியராகப் பொறுப் பேற்றார்.
- 1905ல் 'சக்கரவர்த்தினி' என்ற இதழைத் தொடங்கினார்.
- கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் 1906-இல் கலந்து கொண்டார்
- 1907-ல் 'இந்தியா' என்ற நாளோட்டினைத் தொடங்கினார்.
- 1908ல் ஆங்கிலத்தில் 'பாலபாரதம்' என்னும் இதழைத் தொடங்கி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதன் ஆசிரியராக பணியாற்றினார்.
- 1908ஆம் ஆண்டு தாம் பாடிய பாடல்களை 'ஸ்வதேச கீதங்கள்' என்னும் தலைப்பில் வெளியிட்டார்.
- 1918ல் பாரதி கடலூரில் - சிறைப்பட்டு 14 நாட்களில் விடுதலை பெற்றார்.
- 1921-இல் ஆடுவோமே பள்ளுப் பாடுவோமா ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று பாடினார்.
- பாரதியின் ஞானரதம் என்பதே தமிழில் தோன்றிய முதல் உரைநடைக் காவியம் ஆகும்.
- பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள் பாரதநாடு என்றும் பாடினார்.
- விடுதலை வேட்கையைத் தூண்டும் வகையில், விடுதலை! விடுதலை! விடுதலை! என்றும், “என்று தனியும் இந்தச் சுதந்திரதாகம்” என்றும் பாடினார்.
- விஜயா,கர்மயோகி,சூரியோதயம் ஆகிய இதழ்களிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.
- பாரதியார் பகவத்கீதையை தமிழி மொழிப் பெயர்த்தார்.
- ஆங்கில கவிஞர் ஷெல்லி மீது ஈடுபாடு கொண்டு ஷெல்லிதாசன் என தன்னை அழைத்து கொண்டார்
- கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் போன்ற பாடல்களையும் பாடினார்.
- சந்திரிகையின் கதை,நவதந்திரக் கதைகள்,தராசு, புதிய ஆத்திசூடி,சின்ன சங்கரன் கதை ஆகிய நூல்களையும் பாரதியார் இயற்றியுள்ளார்.
- ஆனந்தக் களிப்பு, கிளிக்கண்ணிகள், நந்தனார்,சரித்திர மெட்டு, காவடிச்சிந்து என்ற எளி ராகங்களிலும் பாடியுள்ளார்.
பாரதியாரின் புகழ்பெற்ற பாடல் வரிகள்:
எல்லோரும் ஓர்குலம்! எல்லோரும் இனம்
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை(பெண்ணடிமைக்கு எதிராக பாடினார்)
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்.
சாதிகள் இல்லையடி பாப்பா
பாரதியாரை புகழ்ந்த அறிஞர்கள்:
- பாட்டுக்கொரு புலவன் பாரதி என்று கவிமணி பாரதியாரை போற்றுகிறார்.
- தமிழால் பாரதி தகுதி பெற்றதும் தமிழ் பாரதியார் தகுதி பெற்றதும் பற்றி என்னென்று சொல்வது என்றும் நீடு துயில் நீக்க பாடி வந்த நிலா, பைந்தமிழ் தேர்ப்பாகன் என்றும் கூறுகிறார் பாரதிதாசன்.
- தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி, விடுதலை கவி,மகாகவி என்றும் போற்றப்படுகிறார்.