கர்னல் பென்னிகுயிக்:


கர்னல் பென்னிகுயிக்: 

பென்னிகுயிக் ஓர் இராணுவப் பொறியாளரும், குடிமைப்பணியாளரும், சென்னை மாகாணச் சட்டமன்ற மேலவை உறுப்பினரும் ஆவார். 


மேற்கு நோக்கி ஓடும் பெரியார் ஆற்றின் நீரை ஓர் அணையைக் கட்டி கிழக்குநோக்கித் திருப்பினால் வைகை ஆற்றைச் சார்ந்திருக்கும் இலட்சக்கணக்கான புன்செய் நிலங்களைப் பாசன வசதி கொண்டவையாக மாற்ற முடியும் என அவர் முடிவு செய்தார். பென்னிகுயிக்கும் ஏனைய ஆங்கிலேயப் பொறியாளர்களும் இயற்கையின் சீற்றத்தையும் வனவிலங்குகள், விஷ உயிரினங்கள் ஆகியவற்றின் ஆபத்துக்களையும் எதிர்கொண்டு அணையின் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டபோது இடைவிடாத மழையால் இடையூறுகள் ஏற்பட்டன. ஆங்கிலேய அரசிடமிருந்து போதுமான அளவுக்கு நிதியைப் பெறமுடியாத நிலையில் பென்னிகுயிக் இங்கிலாந்து சென்று தனது குடும்பச் சொத்துக்களை விற்று, அப்பணத்தைக் கொண்டு அணையைக் கட்டி முடித்தார். அணைகட்டும் பணிகள் 1895இல் முடிவுற்றன. 

முல்லைப் பெரியார் அணை மூலம் தற்போது பாசனம் பெறும் மாவட்டங்கள்:

  1. தேனி.
  2. திண்டுக்கல்.
  3. மதுரை.
  4. சிவகங்கை.
  5. இராமநாதபுரம் 

ஆகிய மாவட்ட வேளாண் நிலங்களுக்குத் தொடர்ந்து பாசன வசதி அளித்து வருகிறது.

Post a Comment

Previous Post Next Post