தாவரச் செல் மற்றும் விலங்கு செல்களுக்கு இடையே உள்ள வேறுபாடு

 


தாவர செல், விலங்கு செல் வேறுபாடு

வ.எண் தாவரச் செல் விலங்கு செல்
1. பொதுவாக விலங்கு செல்லோடு ஒப்பிடும் போது தாவரச் செல் பெரியது தாவாரச் செல்லைக் காட்டிலும் விலங்கு செல் சிறியது.
2. பிளாஸ்பா சவுடன் கூடுதலாகச் செல்சுவர் காணப்படுகிறது. இது மையத்தட்டு முதன்மை கவர் மற்றும் இரண்டாம் நிலைச்சுவரைக் கொண்டுள்ளது. செல் சுவர் கிடையாது.
3. பிளாஸ்மோடெஸ்மேட்டா காணப்படுகிறது. பிளாஸ்மோடெஸ்மேட்டா காணப்படுவதில்லை.
4. பகங்கணிகம் காணப்படுகின்றன. பசுங்கணிகம் காணப்படுவதில்லை.
5. நிலையான பெரிய வாக்குவோல்கள் காணப்படுகின்றன. தற்காலிகச் சிறிய வாக்குவோல்கள் காணப்படுகின்றன.
வாக்குவோலைச் சுற்றி டோனோபிளாஸ்டு சவ்வு காணப்படுகிறது டோனோபிளாஸ்டு காணப்படுவதில்லை.
7. பொதுவாகச் சென்ட்ரியோல்கள் காணப்படுவதில்லை. ஆனால் நகரும் திறன் கொண்ட கீழ்நிலை தாவரச் செல்களில் மட்டும் காணப்படுகிறது. சென்ட்ரியோல்கள் காணப்படுகின்றன.
8. உட்கரு செல்லின் ஓரங்களில் காணப்படுகிறது. உட்கரு செல்லின் மையத்தில் காணப்படுகின்றன.
9. லைசோசோம்கள் அரிதாகக் காணப்படுகின்றன. லைசோசோம்கள் காணப்படுகின்றன.
10. சேமிப்பு பொருளாகத் தரசம் உள்ளது. சேமிப்பு பொருளாகத் கிளைகோஜன் உள்ளது.

1 Comments

Previous Post Next Post