வெண்ணிமுத்து அய்யனார் துணை
- திருமூலர்
- சிவவாக்கியர்.
- பட்டினத்தார்
- பத்திரகிரியார்
- பாம்பாட்டிச்சித்தர்
- இடைக்காட்டுச் சித்தர்
- அகப்பேய்ச் சித்தர்
- குதம்பைச்சித்தர்
- கடுவெளிச்சித்தர்
- அழகணிச்சித்தர்
- கொங்கணச்சித்தர்
- சட்டைமுனிச்சித்தர்
- அகத்தியர்.
- சுப்பிரமணிய சித்தர்.
- போகர்.
- உரோம முனி சித்தர்.
- கருவூர்ச் சித்தர்.
- தேரையர்.
நந்தி அகத்தியர் மூலர் புண்ணாக்சீசர் நற்றவத்துப் புலத்தியரும் பூனைக் கண்ணர் தந்திடைக்காரரும் போகர் புலிக்கையீசர் கருவூரர் கொங்கணர் காலாந்தி சிந்தி எழுகண்ணர் அகப்பேயர் பாம்பாட்டி தேரையரும் குதம்பையரும் சட்டை நாதர் செந்தமிழ் சேர் சித்தர் பதினென் பாதம் நிந்தையுண்ணிச் சிரத்தணியாய் சேர்த்தி வாழ்வாம். என்ற பழம் பாடல் இவர்களின் பட்டியலைக் கூறும்.
திருமூலர்:
- பத்தாம் திருமுறையான திருமந்திரத்தை இயற்றியவர்.
- மூலன் உடலில் இருந்தமையால் திருமூலர் எனப்பட்டார்.
- ஆண்டுக்கு ஒரு முறை விழித்தெழுந்து ஒரு பாடல் வீதம் மூவாயிரம் பாடல்கள் பாடினார்.
- இதன் தொகுப்பே திருமந்திரம் எனப்படுகிறது.
- இது 9 தந்திரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது.
- சைவ சித்தாந்தம், தத்துவமசி என்னும் சொற்கள் முதன் முதலில் திருமந்திரத்தில் தான் காணப்படுகின்றன.
உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன் உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே
-திருமூலர்
சிவவாக்கியர்:
- இவரது பாடல்கள் சிந்தனையும் தெளிவையும் தரவல்லன.
- இவர் பாடியப் பாடல்கள் 520.
- இவர் யோகச்சித்தர் ஆவார்.
பட்டினத்தார்:
- இவர் நிலையாமையினை உணர்ந்த யோகி.
- மனித வாழ்வினை, “நாற்றப் பாண்டம் நான்முழத்து ஒன்பது பீற்றல் துண்டம் போய்ச்சுரைத் தோட்டம்'என்று எடுத்துரைக்கிறார்.
பத்திரகிரியார்:
- இவர் துளுவ நாட்டு மன்னர்.
- பட்டினத்தாரைக் கழுவேற்ற முயன்றபோது தோற்று அவருக்கே அடிமையாகி இன்பங்களைத் துறந்தார்.
- இவரது பாடல்கள் பத்திரகிரியார் புலம்பல் எனப்படும்.
- பேய்போல் திரிந்து பிணம்போல் பெண்ணைத்தாய்போல் நினைத்துத் தவம் முடிப்பது எக்காலம்.
பாம்பாட்டிச் சித்தர்:
- பாம்பு வடிவாக மண்டலித்து உள்ள குண்டலினி சக்தியை எழுப்பி அதன்மூலம் ஆன்ம தரிசனம் பெற இயலும்.
- இச்சக்தியை மேலே எழுப்பி ஆடு பாம்பே எனப் பாடியதால் பாம்பாட்டிச்சித்தர் எனப் பெயர் பெற்றார்.
- இவர் 129 பாடல்களை இயற்றியுள்ளார்.
- இவர் கொங்கு நாட்டு மருத மலையில் வாழ்ந்தவர் என்பர்.
இடைக்காட்டுச் சித்தர்:
- கோனார் என அழைக்கப்படும் இடையர்களையும், ஆடுமாடுகளையும் முன்னிருத்து பாடியதால் இவருக்கு இப்பெயர்.
- இடைக்காடு என்னும் ஊரினராதலால் இப்பெயர் பெற்றார் என்றும் கூறுவர்.
- இவர் கொங்கணச் சித்தரின் சீடர்.
- இவரது காலம் கி.பி. 15 ஆம் நூற்றாண்டு.
அகப்பேய்ச் சித்தர்:
- அலையும் மனத்தைப் பேய் என உருவகித்ததால் இவருக்கு இப்பெயர்.
- பேய் மணத்தைப் பெண்ணாக விளித்துப் பாடுகிறார்.
- மனத்தை அலைய விடாமல் ஒரு நிலைப் படுத்த வேண்டும் என்பதனை, "ஆரலைத் தாலும் நீயலை யாதேடி ஊரலைந் தாலும் ஒன்றையும் நாடாதே''என பாடியுள்ளார்.
குதம்பைச் சித்தர்:
- குதம்பை என்பது காதணி. குதம்பை அணிந்த பெண்களை முன்னிலைப் படுத்திப் பாடியதால் இவருக்கு இப்பெயர்.
- குதம்பை சித்தர் பாடிய பாடல்கள் - 32
- ஈறிலாப் பெருவாழ்வை இவர், “சாகாமல் தாண்டித் தனிவழி போவோர்க்கு ஏகாந்தம் ஏதுக்கடி ? - குதம்பாய் ஏகாந்தம் ஏதுக்கடி "எனக் குறிப்பிடுகின்றார்.
கடுவெளிச் சித்தர்:
- வாக்கு மனம் கடந்து பரவெளியைக் கடுவெளி எனப் பாடியதால் இவருக்கு இப்பெயர்.
- இவர் பாடின “34 கண்ணிகள்”. காலம்
- கி.பி. 15 ஆம் நூற்றாண்டு.
“நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன் நாலாறு வருசமாய் குயவனை வேண்டி கொண்டுவந்தான் ஒரு தோண்டி” - எனப் பாமரரும் அறிந்த பாட்டு கடுவெளிச்
சித்தர் பாடல் ஆகும்.
அழகணிச் சித்தர்:
- அழகு+அணி=அழகணி,இவரது பாடல்கள் அழகும் அணி நயமும் மிகுந்து காணப்படுவதால் இவருக்கு இப்பெயர்.
- பாமரர் நாவில் அழுகுணிச் சித்தர் என வழங்குவதாயிற்று.
"பையூரி லேயிருந்து பாழுரிலே பிறந்து மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன்"
என்னும் தேடலை இவர் அழகாக இயற்றியுள்ளார்.
கொங்கணிச் சித்தர்:
- இவரது காலம் கி.பி. 7-ஆம் நூற்றாண்டு.
- கொங்குநாட்டைச் சேர்ந்தவராதலால் இவருக்கு இப்பெயர்.
- இவர் ரசவாதம், யோகம், மருத்துவம் பற்றிய நூல்களை எழுதியுள்ளார்.
''கண்டதும் கேட்டதும் சொல்லாதே கண்ணில்
காணாத உத்தரம் விள்ளாதே பெண்டாட்டிக்கு உற்றது சொல்லாதே பெற்ற
பிள்ளைக்கு இளப்பம் கொடுக்காதே"
என அறிவுறுத்துகிறார்.
சட்டை முனி:
சட்டை முனி ஆயிரத்திஇருநூறு, திரிகாண்டம், சரக்கு வைப்பு, நவரத்தின வைப்பு முதலிய நூல்களை இயற்றியுள்ளார். தயக்கத்தினால் வரும் தீமை பற்றி,
"தயங்கினார் கலகத்தில் கோடிபேர்கள், சாவதும் பிறப்பதும்காவடி போல் ஆச்சு தயங்கினார் துயரத்தில் ஞானம் போச்சு"
என எச்சரிக்கின்றார்.
அகத்தியர்:
- அகத்தியர் பலர் உள்ளனர்.
- அகத்தியச் சித்தர், சித்த மருத்துவ முறைகளை வகுத்தவர்களுள் முதன்மையானவராகக் கருதப்படுகிறார்.
- அனைத்து சமயத்தவர் கொள்கைகளிலும் உள்ள மேன்மைகளைப் போற்ற வேண்டும் என்கிறார்.
பாய்ச்சலது பாயாதே பாழ்போ காதே
பலவேத சாத்திரமும் பாருபாரு
சுப்பிரமணிய சித்தர்:
- பல பாடல்களில் முருகனை 'மயில் வீரன்' எனக் குறிப்பிடுகின்றார்.
- இறைவனை முருகனாகவே காண்கிறார்.
- வேல் முனையை தியானம் பண்ணிப் பாயவிட, மனதில் இருந்த அசுரர் கூட்டம் பறந்து போயிற்று என்கிறார்.
போகர்:
- திருமூலரின் மாணாக்கரான காலங்கி நாதரின் மாணாக்கர் இவர்.
- போகர் ஏழாயிரம், போகர் திருமந்திரம், நிகண்டு பதினேழாயிரம் முதலான நூல்களை எழுதியுள்ளார்.
- மருத்துவர் பழஞ்சுவடிகளைப் போகரின் பெயரால் கூறுவதும் உண்டு.
- “போகர் நிகண்டு” மருத்துவம் பற்றி கூறும் நூல் ஆகும்.
உரோமமுனி சித்தர்:
- இவருக்கு உடலெங்கும் உரோமம் மிகுந்து இருந்ததால் 'உரோமமுனி' எனப்பட்டார்.
- உரோம முனி ஞானம்,உரோம முன் நூறு, உரோம முனி ஐந்நூறு, ஐம்புல நூல், ஆகியவை இவரது படைப்புகள்.
கருவூரார்:
- கருவூரில் பிறந்தவர் ஆதலால் இப்பெயர் உண்டு.
- தஞ்சையில் ராஜராஜ சோழன் கட்டிய சிவலிங்கத்தை இவர் நிறுவினார்.கோயிலில் கருவூராருக்குச் சிலை உள்ளது.
- இவருக்குப் தஞ்சையில் ராஜராஜன் கட்டிய கோயிலில் கருவூர்சித்தர் பூஜைக்குரிய விதிமுறைகளைப் பாடியுள்ளார்.
தேரையர்:
- மன்னனின் தலைக்குள் இருந்த தேரையை அகற்றியதால் இவருக்கு இப்பெயர் வந்தது.
- நோய் அணுகாவிதி, பதார்த்த குணசிந்தாமணி, வைத்திய சிந்தாமணி, கலைஞானம் முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா
Tags:
ஆன்மீகம் மற்றும் ஜோதிடம்