பதினெண் மேல் கணக்கு நூல்கள்

பதினெண் மேல் கணக்கு நூல்கள்:
  1. எட்டுத்தொகை
  2. பத்துப்பாட்டு

எட்டுத்தொகை:

எட்டுத்தொகை நூல்களின் வரிசை

நற்றினை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு, ஒத்த பதிற்றுப்பத்து ஓங்க பரிபாடல், கற்றறிந்தோர் ஏத்தும் கலியோ டகம்புறமென், றித்திறந்த எட்டுத் தொகை.

எட்டுத்தொகை நூல்களும் ஆசிரியர்களும்

வ.எண் நூல் தொகுத்தவர் தொகுப்பித்தவர்
1 ஐங்குறுநூறு கூடலூர் கிழார் யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
2 குறுந்தொகை பூரிக்கோ பெயர் தெரியவில்லை
3 நற்றினை பெயர் தெரியவில்லை பன்னாட்டு தந்த பாண்டியன் மாறன் வழுதி
4 அகநானூறு உருத்திரசன்மனார் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
5 கலித்தொகை நல்லந்துவனார் பெயர் தெரியவில்லை
6 புறநானூறு பெயர் தெரியவில்லை பெயர் தெரியவில்லை
7 பதிற்றுப்பத்து பெயர் தெரியவில்லை பெயர் தெரியவில்லை
8 பரிபாடல் பெயர் தெரியவில்லை பெயர் தெரியவில்லை

பத்துப்பாட்டு:

பத்துப்பாட்டு நூல்களின் வரிசை

முருகு பொருநூறு பாணிரண்டு முல்லை, பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய, கோலநெடு நல்வாடை கோல் குறிஞ்சி பட்டினம், பாலை கடாத்தொடும் பத்து.

பத்துப்பாட்டு நூல்களும் ஆசிரியர்களும்

வ.எண் நூல் தொகுத்தவர் தொகுப்பித்தவர்
1 திருமுருகாற்றுப்படை நக்கீரர் முருகன்
2 பொருநராற்றுப்படை முடதாமக் கண்ணியார் கரிகாலன்
3 சிறுபாணாற்றுப்படை நல்லூர் நத்தத்தனார் நல்லியக்கோடன்
4 பெரும்பாணாற்றுப்படை உருத்திரங்கண்ணனார் இளந்திரையன்
5 மலைபடுகடாம் பெருங்கௌசிகனார் நன்னல்சேய் நன்னன்
6 மதுரைக் காஞ்சி மாகுடி மருதனார் நெடுஞ்செழியன்
7 முல்லைப்பாட்டு நப்பூதனார் நெடுஞ்செழியன்
8 குறிஞ்சிப் பாட்டு கபிலர் ஆரிய அரசன் பிரகதத்தன்
9 பட்டினப்பாலை உருத்திரங்கண்ணனார் கரிகாலன் (திருமாவளவன்)
10 நெடுநல்வாடை நக்கீரர் நெடுஞ்செழியன்

Post a Comment

Previous Post Next Post