மேற்கோள் வரிகள் மற்றும் அதனுடன் தொடர்புடையவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மேற்கோள் வரிகள்
மேற்கோள் வரிகள் | தொடர்புடையவர்கள் |
---|---|
அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது | ஔவையார் |
வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே | பாரதிதாசன் |
யாதும் ஊரே யாவரும் கேளிர் | கனியன் பூங்குன்றனார்-புறநானூறு |
தீதும் நன்றும் பிறர்தா வாரா | கனியன் பூங்குன்றனார்-புறநானூறு |
கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே | ஔவையார் |
பசித்திரு தனித்திரு விழித்திரு | இராமலிங்க அடிகளார் |
கண்மூடி வழக்கமெலாம் மண்மூடி போக | இராமலிங்க அடிகள் |
கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம் | பாரதிதாசன் |
அடிகள் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு | பாரதியார் |
ஒன்றே குலம் ஒருவனே தேவன் | திருமூலர் - திருமந்திரம் |
காக்கை குருவி எங்கள் ஜாதி | பாரதியார் |
கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது | நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை |
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே | மணிமேகலை |
உண்டாலம்ம இவ்வுலகம் | புறநானூறு |
கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி | புறநானூறு |
நீடு துயில் நீக்க பாடி வந்த நிலா எனப்படுபவர் | பாரதியார் |
நீடு துயில் நீக்க பாடி வந்த நிலா எனப் பாடியவர் | பாரதிதாசன் |
சீரிளமைத் திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே | பேராசிரியர் சுந்தரம் பிள்ளை |
நாமெல்லாம் ஒரேமரத்து இலைகள் | காந்தியடிகள் |
பரணிக்கோர் ஜெயங்கொண்டார் எனப் புகழ்ந்தவர் | பலபட்டடை சொக்கநாதப் புலவர் |
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | திருவள்ளுவர் |
நரைமுடித்து முறை செய்த அரசன் | கரிகால சோழன் |
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு | அண்ணா |
தமிழுக்கு அமுதென்று பேர் | பாரதிதாசன் |
எல்லாரும் இந்நாட்டு மன்னர் | பாரதியார் |
பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டட்ப பாடிய கவிவலவ... எனப் பாடியவர் | மீனாட்சி சுந்தரம்பிள்ளை(சேக்கிழாரை குறிப்பிடுகிறார்) |
இருட்டறையில் உள்ளதடா உலகம் | பாரதிதாசன் |
நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் | திருநாவுக்கரசர் |
புதியதோர் உலகு செய்வோம் | பாரதிதாசன் |
ஏழை யென்றும் அடிமை யென்றும் எவருமில்லை சாதியில் | பாரதியார் |
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் | பாரதியார் |
தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா | நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை |
மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா | கவிமணி |
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் | சிலப்பதிகாரம் |
எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆவான் | ஆத்திசூடி - ஔவையார் |
குறிக்கோளிலாது கெட்டேன் | திருநாவுக்கரசர் |
இன்பமே எந்தாளும் துன்பமில்லை | திருநாவுக்கரசர் |
ஈயென இரத்தல் இழிந்தன்று | புறநானூறு |
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே | புறநானூறு |
வினையே ஆடவர்க்கு உயிரே | குறுந்தொகை |
பெண் விடுதலை வேண்டும் எண்ணிய முடிதல் வேண்டும் | பாரதியார் |
உடம்பார் அழிபின் உயிரார் அழிவர் | திருமூலர் |
தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் | பாரதியார் |
நல்லதே எண்ணல் வேண்டும் | பாரதியார் |
எதையும் தாங்கும் இதயம் வேண்டும் | அண்ணா |
நஞ்சம் உண்பர் நனி நாகரிகர் | நற்றினை |
பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல் | கலித்தொகை |
செல்வத்துப்பயனே ஈதல் | புறநானூறு |
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு | பாரதியார் |
உழைப்பின்வாரா உறுதியும் உளவோ | புறநானூறு-கபிலர் |
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் | திருக்குறள் |
என் கடன் பணிசெய்து கிடப்பதே | திருநாவுக்கரசர் |
காலத்தே வாளோடு முன் தோன்றிய முத்தமிழ் | புறப்பொருள் வெண்பாமாலை-ஐயனாரிதனார்(ஆசிரியர்) |
தேனில் ஊறிய சுவை தேரும் சிலப்பதிகாரம் | கவிமணி |
நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின் | புறநானூறு |
சாதி இரண்டொழிய வேறில்லை | ஔவையார் |
ஒன்றே செய்தல் வேண்டும் ஒன்றும் நன்றே செய்தல் வேண்டும் | கபிலர் |
தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர் | பாரதிதாசன் |
சீரைத்தேடின் ஏரைத் தேடு | ஔவையார் |
என்று தணியும் இந்த சுதந்திர தாகம் | பாரதியார் |
எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே | தாயுமானவர் |
எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே | ஔவையார்-புறநானூறு |
உண்டி முதற்றே உணவின் பிண்டம் | புறநானூறு - குடபுலவியனார் |
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே | பொன்முடியார்- புறநானூறு |
உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே | ஔவையார் |
உள்ளத்தில் உள்ளது கவிதை இன்ப உருவெடுப்பது கவிதை | கவிமணி |
Tags:
TNPSC