நான்குமால் அளந்து காண்பிக்க வேண்டி மனு எப்படி எழுதுவது என்று இப்போது பார்ப்போம்:
நான்குமால் என்றால் என்ன?
நான்குமால் என்பது ஒரு இடத்திற்கு நான்கு பக்கமும் உள்ள எல்லை(boundary) ஆகும்.
நான்குமால் அளப்பதற்கு நாம் தலைமை நில அலுவலருக்கு படி கட்ட வேண்டும்.படி கட்டிய மாதிரி சலான் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
அனுப்புநர்
பெயர்,
ஊர்,
தாலுகா,
மாவட்டம்.
பெறுநர்:
வருவாய் வட்டாட்சியர் அவர்கள்,
வருவாய் வட்டாட்சியர் அலுவலகம்.
இடம்.
ஐயா,
வணக்கம் நான் மேற்படி விலாசத்தில் குடியிருந்து வருகிறேன்.எனக்கு பாத்தியப்பட்ட நிலம் ---------------- கிராமத்தில் சர்வே எண்--------- உள்ளது.மேற்படி இடத்திற்கு நான்குமால் அளந்து காண்பிக்க பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.இத்துடன் நான்குமால் அளக்க அரசுக்குரிய சலான் இத்துடன் இணைத்துள்ளேன்.
இப்படிக்கு
பெயர்.
இணைப்பு:
1.சலான்
மாதிரி சலான்
Tags:
letter