முக்கிய கடல் நீரோட்டங்கள்

கடல் நீரோட்டம் என்றால் என்ன?

பொதுவாக கடல் நீரோட்டம் (ocean current) கடலின் மேற்பரப்பில் மற்றும் கடலின் ஆழமான பகுதியில் காணப்படும் நீரோட்டம் ஆகும்.கடலின் மேற்பரப்பு நீரோட்டம் காற்றை சார்ந்தது.ஆழ்கடல் நீீரோட்டம் அழுத்தம், மற்றும் வெப்பநிலை சார்ந்தது.முக்கிய கடல் நீரோட்டங்கள் (ocean current) பற்றி இப்போது பார்ப்போம்.

1.பென்குலா நீரோட்டம்

கடல்:தென் அட்லாண்டிக் பெருங்கடல்

விளைவுகள்:

நமீபியா கடற்கரையோரப் பகுதிகளைப் பனிமூட்டமாக இருக்கச் செய்கிறது. நமீபியா மற்றும் கலகாரி பாலைவனங்கள் வளர்ச்சியடைய உதவுகிறது.

2.வளைகுடா நீரோட்டம்

கடல்:வட அட்லாண்டிக் பெருங்கடல்

விளைவுகள்:

இந்நீரோட்டம் லேப்ரடார் கடல் நீரோட்டத்துடன் இணைவதன் விளைவாக நியூபவுண்டுலாந்து கடற்கரையோரப் பகுதிகளில் அதிக பனிமூட்டத்தினை உருவாக்குகின்றது. கடற்வழிப் பயணத்திற்குத் தடையாக உள்ளது. மிகப் பெரிய மீன்பிடித்தளங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.

3.வட அட்லாண்டிக் நீரோட்டம்

கடல்:வட அட்லாண்டிக் பெருங்கடல்

விளைவுகள்:

இந்நீரோட்டம் உயர் அட்சப் பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் ஆண்டு முழுவதும் பனி உறையாமல் இருக்க உதவுகிறது.ரோர்விக் துறைமுகம் (நார்வே), மர்மான்ஸ்க் மற்றும் செவிரோட்வின்ஸ்க் (இரஷ்யா

4.லாப்ரடார் நீரோட்டம்

கடல்:வட அட்லாண்டிக் பெருங்கடல்

விளைவுகள்:

வளைகுடா நீரோட்டத்துடன் இணைவதன் விளைவாக பனிமூட்டத்தினை உருவாக்கி, கடல் போக்குவரத்திற்குத் தடையை ஏற்படுத்துகிறது.

5.கேனரி நீரோட்டம்:

கடல்:வட அட்லாண்டிக் பெருங்கடல்

விளைவுகள்:

சஹாரா பாலைவனத்தின் விரிவாக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

6.பெருவியன் (அ) ஹம்போல்டு நீரோட்டம்:

கடல்:தென் பசிபிக் பெருங்கடல்

அட்டகாமா,பாலைவனமாகவே இருப்பதற்குக் காரணமாக உள்ளது. தென் அமெரிக்காவின் மேற்கு பகுதி எல்-நினோவினால் வானிலையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் இந்தியாவில் பருவக்காற்று சரியான நேரத்தில் தொடங்குவதிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

7.குரோஷியோ நீரோட்டம்:

கடல்:வட பசிபிக் பெருங்கடல்

விளைவுகள்:

அருகில் உள்ள பகுதிகளுக்கு அதிக அளவில்  வெப்பத்தினைக் கடத்துவதினால் காற்று விரிவடைந்து மேகமூட்டத்தை உருவாக்கி மழைப்பொழிவைத் தருகின்றது.

8.ஒயோஷியோ நீரோட்டம்:

கடல்:வட பசிபிக் பெருங்கடல்

விளைவுகள்:

இந்நீரோட்டம், குரோஷியோ நீரோட்டத்துடன் இணைவதால் ஹொக்கைடோ தீவில் அதிக  பனிமூட்டத்தினை உருவாக்குவதுடன் கடல் போக்குவரத்திற்கு இடையூராக உள்ளது. ஆனால், ஹொக்கைடோ உலகின் மிகச் சிறந்த மீன்பிடித்தளமாக உள்ளது. 

9.அலாஸ்கா நீரோட்டம்:

கடல்:வட பசிபிக் பெருங்கடல்

விளைவுகள்:

அலாஸ்காவின் துறைமுகங்களை, ஆண்டு முழுவதும் செயல்பட உதவுகிறது.

10.கலிபோர்னியா நீரோட்டம்:

கடல்:வட பசிபிக் பெருங்கடல்

விளைவுகள்:

கலிபோர்னியாவின் கடற்கரையோரப் பகுதிகளில்  மேகமூட்டத்தினை உருவாக்குகின்றது. அரிசோனா மற்றும் சொனாரன் பாலைவனங்கள் உருவாக காரணமாக உள்ளது.

11.மேற்கு ஆஸ்திரேலிய நீரோட்டம்:

கடல்:இந்தியப் பெருங்கடல்

ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையோரப் பகுதிகளில் மேகமூட்டத்தினை உருவாக்குகின்றது. மேற்கு ஆஸ்திரேலியப் பாலைவனம் உருவாகக் காரணமாகவும் உள்ளது.

Post a Comment

Previous Post Next Post