நண்பனுக்கு கடிதம் எழுதுவது எப்படி?

விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற நண்பனை பாராட்டி எவ்வாறு கடிதம் எழுதுவது என்று இப்போது பார்ப்போம்.
இந்த கடிதம் முறைசாரா கடித(informal letter) வகையில் வரும்.


பாராட்டு கடிதம்

இடம்,
தேதி.
எண் அருமை நண்பா,
நான் நலம்.உன் நலம் அறிய ஆவலாக உள்ளேன்.இந்த ஆண்டு உன் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு உயரம் தாண்டுதல், ஓட்டப் போட்டியில் முதல் பரிசு பெற்றதாய் எனக்கு கடிதம் எழுதினாய்.அதை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.உனக்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

விளையாட்டு மட்டும் அல்ல படிப்பிலும் தனி முத்திரை பதிக்க உன்னை மனமார வாழ்த்துகிறேன்.மேலும் மாநில மட்டும் தேசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிட மனமார வாழ்த்துகிறேன்.

இப்படிக்கு
உன் அன்பு நண்பன்
(பெயர்).
உறைமேல் எழுத வேண்டிய முகவரி:

பெறுநர்

பெயர்,
ஊர்,
வட்டம்,
மாவட்டம்.

Post a Comment

Previous Post Next Post