பிரிட்டனின் நேரடி ஆட்சி (1858-1947)

இந்திய அரசுச் சட்டம்-1858:

இச்சட்டம் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி அதிகாரங்களைப் பறித்து ஆங்கில அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இந்தியாவைக் கொண்டு வந்தது.

இந்தியாவின் தலைமை ஆளுநர் வைசிராய்(அரசு பிரதிநிதி) ஆக அறிவிக்கப்பட்டார்.
இந்தியாவின் முதல் வைசிராய் கானிங் பிரபு ஆவார்.

தலைமை ஆளுநரின் கவுன்சிலில் அலுவல் சாராத உறுப்பினர்களை அதாவது, இந்தியர்களை இணைத்துக்கொள்ள வழி செய்தது.

அயலுறவுச் செயலாளர் என்ற கேபினட் அமைச்சர் பதவி உருவாக்கப்பட்டது.

இந்திய கவுன்சில் சட்டம்-1861:

இச்சட்டம் இந்தியர்களுக்கு முதன்முறையாக சட்டமியற்றும் அதிகாரத்தை பெற வழிவகை செய்தது. அதவாது வைசிராய்களுக்கு இந்தியர்களை சட்டமியற்றுவதற்கு நியமிக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டது.

பம்பாய், சென்னை மாகாணங்கள் முன்பு இழந்த சட்டமியற்றும் அதிகாரங்களைப் பெற்றன.

இச்சட்டம் வைசிராய்க்கு அவசரச் சட்டங்களை பிரகடனம் செய்யவும் அதிகாரம் அளித்தது.இந்த அவசர சட்டங்கள் மாகாணத்தின் ஒப்புதல் இன்றியும் அமையலாம்.இச்சட்டம் ஆறு மாத காலம் அமலில் இருக்கும்.

இந்திய கவுன்சில் சட்டம்-1892:

தலைமை ஆளுநரின் கவுன்சில், மாகாண கவுன்சில்களில் கூடுதல் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு அவை விரிவுபடுத்தப்பட்டன.

அலுவல் சாராத உறுப்பினர்களை நியமனம் செய்ய மறைமுகத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

கவுன்சில் உறுப்பினர்கள் வரவு-செலவு அறிக்கை பற்றி விவாதம் நடத்தவும், பொதுமக்கள் நலன் கருதி வினாக்கள் எழுப்பவும் அனுமதிக்கப்பட்டனர். 

பிரதிநிதித்துவ முறை, நிர்வாகத்துறை பாராளுமன்றத்திற்கு பொறுப்பாக இருத்தல் முதலிய கொள்கைகள் இச்சட்டத்தின் மூலம் செயல்வடிவம் பெறத் தொடங்கின.

இந்திய கவுன்சில் சட்டம்-1909(மிண்டோ-மார்லி சீர்திருத்தம்):

மத்திய மற்றும் மாகாணச் சட்டமன்றத்தின் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

மத்திய சட்டமன்றம் 60 உறுப்பினர் உடையதானது(முன்பு 16)

சாதி அடிப்படையிலான பிரதிநிதித்துவ முறையும், இஸ்லாமியருக்குத் தனித்தொகுதி முறையும் அறிமுகம் செய்யப்பட்டன

மின்டோ பிரபு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்
தலைமை ஆளுநரின் கவுன்சிலில் நியமன உறுப்பினர்கள் பெரும்பான்மையாகவும், மாகாண கவுன்சில்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பெரும்பான்மையாகவும் இருந்தன.

உறுப்பினர்கள் பட்ஜெட் மீது துணைக் கேள்விகள் எழுப்பவும், தீர்மானங்கள் கொண்டு வரவும் அனுமதி அளிக்கப்பட்டனர்.

இந்திய அரசாங்கச் சட்டம்-1919 (மாண்டேகு செம்ஸ்போர்டு):

இச்சட்டம் 1921 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது.இது மாண்டேகு (இந்திய அரசு செயலாளர்) செம்ஸ்போர்டு (இந்திய வைசிராய்) மூலம் கொண்டுவரப்பட்டதால் மாண்டேகு செம்ஸ்போர்டு சட்டம் என்றழைக்கப்படுகிறது.

மத்தியில் இருந்த சட்டமியற்றும் கவுன்சிலுக்குப் பதிலாக மாகாணங்களின் அவை (மேலவை), சட்டமன்றப் பேரவை (கீழவை) என்ற ஈரடுக்கு முறை உருவாக்கப்பட்டது. இரு அவைகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பெரும்பான்மை பெற்றனர். இது இரட்டை ஆட்சி முறை என்று அழைக்கப்பட்டது.

அரசாங்கத்தின் பணிகள் வரையறுக்கப்பட்டு, மைய அரசுப் பணிகள், மாநில அரசுப் பணிகள் என பிரித்தறியப்பட்டன.

இச்சட்டம் மத்திய பட்ஜெட்டில் இருந்து மாகாண பட்ஜெட்டைப் பிரித்தது.

இச்சட்டம் 1926-இல் தேர்வாணயத்தை (public service commission) ஏற்படுத்தியது.இது அரசு பணியாளர்களை தேர்வு செய்தது.

இந்திய அரசுச் சட்டம்-1935:

இச்சட்டம் அதிகாரத்தை மூன்றாகப் பிரித்தது
  1. மத்திய பட்டியல் (central list)
  2. மாகாணப் பட்டியல் (State list)
  3. பொதுப் பட்டியல் (concurrent list)
எஞ்சிய அதிகாரங்கள் வைஸ்ராயிடம் ஒப்படைக்கப்பட்டது.

இது மாகாணங்களில் இரட்டை ஆட்சி முறையை முடிவுக்கு கொண்டு வந்து மாகாணத்திற்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்கியது.

வகுப்புவாத பிரதிநிதித்துவம் பெண்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்டது.

வங்காளம், சென்னை, பம்பாய், ஐக்கிய மாகாணம், பீகார் மற்றும் அஸ்ஸாம் மாகாணங்கள் இரண்டு அவைகளைக் கொண்ட சட்டமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.

1858-ஆம் ஆண்டு சட்டப்படி நிறுவப்பட்ட இந்திய கவுன்சிலை இச்சட்டம் கலைத்தது.

மத்திய ரிசர்வ் வங்கி 1935-இல் கல்கத்தாவில் உருவாக்கப்பட்டது.1937-இல் இது பம்பாய் நகருக்கு மாற்றப்பட்டது.

1937-இல் கூட்டாட்சி நீதிமன்றம் டெல்லியில் உருவாக்கப்பட்டது.

இந்திய விடுதலைச் சட்டம்-1947:

இந்தியா, பாகிஸ்தான் என இரண்டு குடியேற்ற நாடுகளை (டொமினியன்) உருவாக்க 1947 ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாள் குறிக்கப்பட்டது. 

இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ்
பேரரசியின் பொறுப்புகளும், இந்தியச் சுதேச அரசுகள் மீதான மேலாதிக்கம் 1947 ஆகஸ்ட்-15 இல் இருந்து காலாவதியாகிவிடும்.

இத்திட்டத்தை காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் ஆகியவை ஏற்றுக் கொண்டன.

இத்திட்டம் இந்திய சுதந்திர சட்டத்தை நிறைவேற்ற உதவியது.
மவுண்ட்பேட்டன் பிரபு சுதந்திர இந்தியாவின் முதல் தலைமை ஆளுநர் ஆவார்.

அவர் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவிற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

Related: கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி (1773-1858)

Post a Comment

Previous Post Next Post