நான்காம் மைசூர் போருக்குப் பிறகு திப்புவின் குடும்பத்தினர் வேலூர் கோட்டையில் சிறைவைக்கப்பட்டனர். மைசூரின் ஹைதர்அலி, திப்புசுல்தான் ஆகியோரின் பணியாளர்கள் மற்றும் வீரர்கள் 3000 பேரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் அவர்கள் வேலூருக்கு அருகில் இடம் பெயர்ந்தனர்.
இதனால் அனைவரும் துயரமடைந்து ஆங்கிலேயரை வெறுக்கவும் செய்தனர். வேலூர் கோட்டையானது பெரும்பாலான இந்திய வீரர்களைக் கொண்டிருந்தது.
அதன் ஒரு பகுதியினர் அப்பொழுதுதான் 1800ல் நடைபெற்ற திருநெல்வேலி பாளையக்காரர் கிளர்ச்சியில் பங்கு பெற்றவர்களாகவும் இருந்தனர்.மேலும் பல்வேறு பாளையங்களைச் சேர்ந்தபயிற்சி பெற்ற வீரர்கள் ஆங்கிலப் படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். எனவே வேலூர் கோட்டை தென்னிந்திய கிளர்ச்சியாளர்களின் சந்திப்பு மையமாக திகழ்ந்தது.
1803ல் வில்லியம் காவெண்டிஷ் பெண்டிங் என்பவர் சென்னை மாகாண கவர்னரானார். அவரது காலத்தில் (1805-1806 ல்)சில கட்டுப்பாடுகள் இராணுவத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது, அதனை பின்பற்ற வேண்டுமென இராணுவ வீரர்கள் சென்னை மாகாண படைத்தளபதி சர் ஜான் கிரடாக் என்பவரால் கட்டாயப்படுத்தப்பட்டனர். சிப்பாய்கள் அதனை தங்களை அவமானப்படுத்த ஆங்கிலேயரால் வடிவமைக்கப்பட்டது எனக்கருதினர்.
கலகத்திற்கான காரணங்கள்:
- கடுமையான கட்டுப்பாடுகள், புதிய ஆயுதங்கள்,புதிய முறைகள் மற்றும் சீருடைகள் என அனைத்தும் சிப்பாய்களுக்கு புதிதாக இருந்தன.
- தாடி, மற்றும் மீசையை மழித்து நேர்த்தியாக வைத்துக்கொள்ள சிப்பாய்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
- சமய அடையாளத்தை நெற்றியில் அணிதல்,காதுகளில் வளையம் (கடுக்கன்) அணிதல் ஆகியன தடைசெய்யப்பட்டன.
- ஆங்கிலேயர்கள், இந்திய சிப்பாய்களை தாழ்வாக நடத்தியதோடு மட்டுமல்லாமல் சிப்பாய்களிடையே இனபாராபட்சமும் காட்டினர்.
உடனடிக் காரணம்:
கலகத்தின் போக்கு:
வேலூர் கலகத்தின் விளைவுகள்:
- புதிய முறைகள் மற்றும் சீருடை ஒழுங்குமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திப்புவின் குடும்பத்தினர் வேலூரிலிருந்து கல்கத்தாவிற்கு அனுப்பப்பட்டனர்.
- வில்லியம் காவெண்டிஷ் பெண்டிங் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
கலகத்தின் தோல்விக்கான காரணங்கள்:
- இந்திய படை வீரர்களை வழிநடத்த சரியான தலைமையில்லை.
- கலகம் மிகச் சரியாக வடிவமைக்கப்படவில்லை.
- ஆங்கிலேயர்களின்பிரித்தாளும்கொள்கை இந்தியர்களின் ஒற்றுமையில் பிளவை ஏற்படுத்தியது.
- 1806ல் நடந்த வேலூர் கலகத்தை,1857ல் நடைபெற்ற முதல் இந்திய சுதந்திரப் போரின் முன்னோடி என வி.டி.சவார்க்கர் குறிப்பிடுகிறார்.