கலைவாணரின் இளமைப்பருவம் கட்டுரை

கலைவாணரின் இளமைப்பருவம் பற்றி கட்டுரை எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.

முன்னுரை: 

பார் போற்றும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் இளமைப் பருவம் பற்றி இக்கட்டுரையில் காண்போம். 

பொருளுரை: 

இவர் குமரி மாவட்டத்தில் உள்ள ஒழுகினிசேரியில் 1908 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 29ஆம் நாள் பிறந்தார். இவரது தந்தை சுடலைமுத்து, தாயார் இசக்கியம்மாள் ஆவார்.இளம் வயதில் இவருக்கு கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நாடக அரங்குகளில் குளிர்பானம் விற்றார். அவரது குரல் வளமும் பாடும் திறனும் நகைச்சுவை பேச்சு அவரை நடிகராக்கியது. பாடுவது ஆடுவது நடிப்பது எழுதுவது உரையாற்றுவது ஆகிய அத்தனை துறைகளிலும் அவரது சிறப்பு வெளிப்பட்டது.

முடிவுரை:

பிறரின் மனம் புண்படாமல் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த கலைவாணரை நாமும் பின்பற்றுவோம். 

Post a Comment

Previous Post Next Post