அண்மையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் நீ கலந்து கொண்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள உன் நண்பன் அல்லது தோழிக்கு ஒரு கடிதம் எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.
பெயர்,
முகவரி,
இடம்.
அன்பு மிக்க நண்பன் ராமருக்கு,
வணக்கம். நான் நலம். என் குடும்பத்தினர் அனைவரும் நலமாக உள்ளனர். அதே போன்று உன் குடும்பத்தினர் நலமாக இருப்பார்கள் எனப் பெரிதும் நம்புகிறேன். நண்பனே முன்பு நான் தெரிவித்தது போல, அண்மையில் மதுரையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சி ஒன்றுக்குச் சென்றிருந்தேன். அங்குச் சிறுவர்கள் , பெரியவர்கள் , உள்நாட்டவர்கள் , வெளிநாட்டவர்கள் எனப் பலரும் வந்துருந்து தங்களுக்கு வேண்டிய நூல்களை குறைந்த விலையில் வாங்கிச் சென்றனர்.அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நூல்களைக் கண்டு நான் வியந்து போனேன். என் வாழ் நாளில் இத்தகு நூல்களை நான் பார்த்ததில்லை. ஒரு பக்கம் அறிவியல் நூல்கள்; வேறொரு பக்கம் சமூகவியல் நூல்களென எங்குப் பார்த்தாலும் நூல்கள் தென்பட்டது. அகரமுதலிகளின் எண்ணிக்கையோ எண்ணில் அடங்கா.
மாணவர்களுக்குச் சிறப்பு தள்ளுபடி தரப்பட்டிருந்ததால் , ஆசிரியரின் துணையுடன் நான் கணினி தொடர்பான சில நூல்களை வாங்கினேன் அவ்விடத்தை நான்கு மணி நேரம் சுற்றிப் பார்த்தப் பிறகு தான் நான் மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் அக்கண்காட்சிக்குப் போய் வர வேண்டும் என விரும்புகிறேன். சொல்ல மறந்து விட்டேனே, நான் சென்ற தினத்தன்று அங்கே ஓர் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.ஆம், ஒரு சிறுவன் பேழையில் அடுக்கப்பட்டிருந்த புத்தகங்களை எடுக்க முயற்சிக்கும் போது அங்கிருந்த புத்தகங்கள் நழுவி அவன்மேல் விழுந்தன. பாவம் அந்தச் சிறுவன் வலியால் துடித்தான். அவன் தாய் ஓடி வந்து அவனைத் தூக்கிய காட்சி இன்னும் என் மனதை விட்டு அகலவில்லை.
நல்லது நண்பனே இத்துடன் எனது மடலை முடித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் என் வணக்கத்தை தெரிவிக்கவும்.
இப்படிக்கு உன் அன்பு நண்பன்,
பெயர்.