இயற்கை தேசிய சின்னங்கள்
தேசிய மரம் - ஆலமரம்:
இந்தியாவின் தேசிய மரம் ஆலமரம் ஆகும். 1950 ஆம் ஆண்டு பெருமையின் சின்னமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. மருத்துவ குணம் கொண்டது.
தேசிய பூ- தாமரை:
இந்தியாவின் தேசிய பூ தாமரை ஆகும்.தாமரை இந்தியாவின் தேசிய பூவாக 1950-ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. சேற்று நீரில் வ்ளர்ந்தாலும் மிக அழகான மலர்கள் மலர்கின்றன.
தேசிய பழம் - மாம்பழம்
இந்தியாவின் தேசிய பழம் மாம்பழம் ஆகும்.மாம்பழம் இந்தியாவின் தேசிய பழமாக 1950-ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது
வைட்டமின் ஏ, சி, டி மய அதிக அளவில்
கொண்டது. பெரும்பாலும். சமவெளிகளில் விளைவிக்கப்படுகிறது.
தேசிய பறவை - மயில்:
இந்தியாவின் தேசிய பறவை மயில்.
மயில் இந்தியாவின் தேசிய பறவையாக 1963-ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது
இந்தியாமவத் தாயகமாகக் கொண்டது. தோகையை கொண்ட பறவை மயில்.
தேசிய விலங்கு - புலி:
இந்தியாவின் தேசிய விலங்கு புலி.
புலி இந்தியாவின் தேசிய விலங்காக 1973-ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது
பூனை இ்னத்தில் மிகப்பெரியது. உலகின்
மொத்த புலிகள் எணணிக்கையில்
இந்தியா 70 % கொணடுள்ளது.
தேசிய ஆறு - கங்கை ஆறு:
இந்தியாவின் தேசிய ஆறு கங்கை ஆறு.
கங்கை ஆறு இந்தியாவின் தேசிய ஆறாக 2008-ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது இது வறறாத ஆறு. வரலாறறுப் புகழ் பெறற தலைநகரங்கள் இவ்வாறறங்கரையில் தோன்றி செழித்தோஙகின.
தேசிய புராதன விலங்கு - யானை:
இந்தியாவின் புராதன விலங்கு (national heritage animal) யானை. யானை இந்தியாவின் புராதன விலங்காக 2010-ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது
ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது
தான் வாழும் காட்டுப் பிரதேசங்களை
பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
தேசிய நன்னீர் வாழ் விலங்கு - ஆற்று ஓங்கில்:
இந்தியாவின் தேசிய நன்னீர் வாழ் விலங்கு ஆற்று ஓங்கில் (river dolphin).
ஆற்று ஓங்கில் இந்தியாவின் நன்னீர் வாழ் விலங்காக 2010-ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.தான் வாழும் ஆறறின் சூழல் அமைவின் நிலமையை உணர்த்தும் கருவியாக
செயல்படுகிறது. அழிந்து வரும்
உயிரினமாக உள்ளது.
தேசிய பாக்டீரியா - லேக்டோ பேசில்லஸ்
இந்தியாவின் தேசிய பாக்டீரியா லேக்டோ பேசில்லஸ் ஆகும்.லேக்டோ பேசில்லஸ் இந்தியாவின் தேசிய பாக்டீரியாவாக 2012-ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது ஒரு தோழமை பாக்டீரியா. இது லேக்டிக் மற்றும் பாக்டீரியாக்கள் குழுவில் முக்கிய பங்கு வகிக்கிறது.
தேசிய ஊர்வன - பாம்பு
இந்தியாவின் தேசிய ஊர்வன பாம்பு ஆகும்.(ஹோஃபிபாக்கஸ் ஹானா) உலகின் நீண்ட விஷம் நிமறந்த பாம்பு. இவை இந்தியாவின் மழைக்காடுகள் மற்றும் சமவெளிகளில் வாழ்கின்ற்ன.
பிற தேசிய சின்னங்கள்
தேசிய கொடி - மூவர்ணக் கொடி
மூவண்ணக்கொடி இந்தியாவின் தேசிய
கொடியாகும். மூன்று வண்ணங்ளும் சம
அளவில் கிடைமட்டமாக அமைந்துள்ளன.
மேல்பகுதியில் உள்ள காவி(deep saffron) நிறுவனம் தைரியத்தையும் தியாகத்தையும் குறிக்கிறது. கீழ்பகுதியில் உள்ள பச்சை நிறம் செழுமையையும் வளத்தையும் குறிக்கிறது.நடுவில் உள்ள வெள்ளை நிறம் நேர்மை அமைதி மற்றும் தூய்மையை குறிக்கிறது.நடுவில் கருநீலத்தில் உள்ள அசோக் சக்கரம் அறவழியையும் அமைதியையும் வழியுறுத்துகிறது. தேசிய கொடியின் நீல அகலம் 3:2 ஆகும்.
இந்திய தேசியக் கொடியை ஆந்திராவைச் சேர்ந்த பிங்காலி வெங்கையா என்பவர் வடிவமைத்தார்.
விடுதலை இந்தியாவின் முதல் தேசியக் கொடி தமிழ்நாட்டில் உள்ள குடியாத்தத்தில் (வேலூர் மாவட்டம்) நெய்யப்பட்டது இக்கொடியைப் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் (15.08.1947) செங்கோட்டையில் ஏற்றினார்.
இக்கொடி தற்போது சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
தேசிய இலச்சினை - நான்முகச் சிங்கம்
சாரநாத் அசோகத் தூணின் உச்சியில் அமைந்திருக்கும் நான்முகச் சிங்கம் இந்தியாவின் தேசிய இலச்சினையாக ஜனவரி 26, 1950இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
தேசிய நாணயம் - ரூபாய்
இந்தியாவின் அதிகாரபூர்வ பணத்தின் பெயர் ரூபாய் 16-ம் நூற்றாண்டில் மன்னர் ஷெர்ஷா சூரி வெளியிட்ட வெள்ளி நாணயத்துக்கு 'ரூபியா' என்று பெயர். அதுவே ரூபாய் என்று மருவியுள்ளது.
ரூபாய்க்கான சின்னம் ₹ இந்தச் சின்னத்தை 2010-ல் வடிவமைத்தவர் தமிழகத்தைச் சேர்ந்த டி உதயகுமார்.
தேசிய நாட்காட்டி - சகநாட்காட்டி
பேரரசர் கனிஷ்கர் காலத்தில் கிபி பொ.ஆ.) 78-ல் சக ஆண்டு முறை தொடங்கியது. இளவேனில் கால சம பகல்இரவு நாளான மார்ச் 22 அன்று இந்த ஆண்டு தொடங்குகிறது. லீப் ஆண்டுகளில் இது மார்ச் 21 ஆக அமையும். சக ஆண்டு முறையையே நமது தேசிய நாட்காட்டி பின்பற்றுகிறது. பிரபல வான் இயற்பியலாளர் மேக்னாத் சாகா தலைமையிலான நாட்காட்டி சீரமைப்புக் குழுவின் பரிந்துரையின் பேரில் 1957 மார்ச் 22 முதல் தேசிய நாட்காட்டி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தேசிய பாடல் - வந்தே மாதரம்
வங்க எழுத்தாளர் பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய வந்தே மாதரம் பாடலின் முதல் பத்தி விடுதலை போராட்டத்தில் முக்கியப் பங்களித்தது, இதன் காரணமாக, தேசிய கீதத்துக்கு இணையான தேசியப் பாடல் என்ற சிறப்பு இப்பாடலுக்கு அளிக்கப்படுகிறது என அரசியலமைப்பு சட்ட நிர்ணய மன்றத் தலைவரும் முன்னாள் குடியரசுத் தலைவருமான ராஜேந்திர பிரசாத் அறிவித்தார், இப்பாடல் ஆனந்த மடம் என்ற நாவலிலிருந்து எடுக்கப்பட்டது.
தேசிய உறுதிமொழி
"இந்தியா எனது தாய்நாடு....." எனத் தொடங்கும் நமது தேசிய உறுதிமொழியைப் பிதிமாரி வெங்கட சுப்பாராவ் என்பவர் தெலுங்கில் எழுதினார்.
தேசிய கீதம்
ஜன கண மன நமது தேசிய கீதமாகும். இது இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைபாட்டிற்கு அடையாளச் சின்னமாக விளங்குகிறது. இப்பாடல் இரவீந்திரநாத் தாகூரால் வங்காள மொழியில் எழுதப்பட்டது. இதன் இந்தி மொழியாக்கம் ஜனவரி 24, 1950இல் இந்திய அரசியலமைப்புச் சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இதர தேசிய அடையாளங்கள்
- தேசிய விளையாட்டு - ஹாக்கி
- தேசிய புத்தகம் - கீதை
- தேசிய மலை - நந்தா தேவி
- தேசிய நீர்வாழ் ஊர்வன - கரியல்
- தேசிய நீர்வாழ் பறவை - கிங்பிஷர்
- தேசிய ஆம்பிபியன்- ஊதா தவளை
- தேசிய நில பறவை - இந்திய பஸ்டர்ட்
- தேசிய பாரம்பரிய பாலூட்டி - சாம்பல் லாங்கூர்
- தேசிய பாரம்பரிய பறவை - பிராமணி காத்தாடி அல்லது இந்திய கழுகு
- தேசிய மொழி - 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்.
- தேசிய அலுவல் மொழி - இந்திய மற்றும் ஆங்கிலம்.