பொருளாதார நிலை
சங்க காலத்தில் வேளாண்மை மக்களின் முக்கியத் தொழிலாகும். நெல் முக்கிய பயிராகும். நூல் நாற்றம், ஆடை நெய்தல் போன்றவை இதர முக்கியத் தொழில்களாகும். பருத்தியாடைகள் உறையூர் மற்றும் “மதுரையில்" பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டன. “கலிங்கம்" என்ற சொல் மெல்லிய ஆடைகளைக் குறிக்கும். சங்க காலத்தின் தொடக்கத்தில் பண்ட மாற்று முறை வழக்கத்திலிருந்து உப்பு முக்கிய வணிகப் பொருளாகும். உப்பு வணிகர்கள் ஊர் ஊராகச் சென்று உப்பை விற்றனர். நகரங்களில் நாளங்காடி மற்றும் அல்லங்காடி எனப்பட்ட பகல்நேர மற்றும் மாலை நேரக் கடைகள் நிறுவப்பட்டன. புகார் நகரில் அத்தகைய கடைகள் இருந்ததாக பட்டினபாலை குறிப்பிடுகிறது.
சுமார் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து தமிழகம் கிரேக்க உரோமானியருடன் வாணிக உறவை மேற் கொண்டது. சங்க இலக்கியங்கள் கிரேக்க - ரோமானியரை யவனர்கள் என்று குறிப்பிடுகின்றன. கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் கிரேக்கர்கள் முதன் முதலில் தமிழகத்துடன் வர்த்தகம் மேற்கொண்டனர். மக்கள் குடியிருந்த குடிசைகளுக்கு குரம்பை என்று பெயர். மாடி வீடுகளுக்கு "வேயா மாடங்கள்" என்று பெயர்.அரண்மணையைச் சுற்றி ஒரு வெற்று வெளி இருக்கும் அதற்கு செண்டுவெளி என்று பெயர்.
சங்ககால ஏற்றுமதி:
சங்க கால தமிழகத்திலிருந்து மிளகு, கிராம்பு, ஏலக்காய், இஞ்சி, சந்தனம், மலர்கள், வாசனைத் திரவியம், அகில், தந்தம், முத்து, பவளம், மூலிகைச் செடிகள், வாழைப்பழம் அரிசி உயர்ந்த ஆடைகள், மற்றும் மஸ்லின் துணி வகைகள் போன்ற பொருட்கள் கிரேக்க - உரோமானிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
இறக்குமதி:
இனிக்கும் மது வகைகள், தங்க நாணயங்கள் மற்றும் அணி கலன்கள், கண்ணாடி செம்பு போன்ற பொருட்களும் குதிரையும் இறக்குமதி செய்யப்பட்டன.
புதுச்சேரி (அரிக்கமேடு, கமரா (புகார்), சொப்தமா (மரக்காணம்), பொறையார்,கொற்கை, குமரி ஆகியன கிழக்குகடற்கரையில் இருந்த முக்கியத் துறை முகங்களாகும்.
மேற்கு கடற்கரையில் முசிறி மற்றும் தொண்டி (பொன்னானி) என்ற இரு சிறப்பு வாய்ந்த துறைமுகங்கள் இருந்தன.
கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் சேர, சோழ அரசுகளோடு பாண்டிய அரசும் முடிவுக்கு வந்தது. அடுத்த மூன்று நூற்றாண்டுக் காலம் தமிழகம் களப்பிரர்களின் ஆதிக்கத்திற்கு உள்ளாகியது.