கட்டுரை வெளியிட வேண்டி நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுவது எப்படி?

உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் என்ற உங்கள் கட்டுரை வெளியிட வேண்டி நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம். 

அனுப்புநர்

பெயர்,
முகவரி,
இடம்.

பெறுநர்

தினமலர் ஆசிரியர் அவர்கள், 
தினமலர் நாளிதழ் அலுவலகம்,
சென்னை. 

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள் : தினமலர் நாளிதழ் பொங்கல் மலரில்,கட்டுரையை வெளியிடக் கோருதல் - சார்ந்து. 

வணக்கம். நிமிர்ந்த நடை நேர்கொண்ட பார்வை நிலத்தில் யார்க்கும் அஞ்சா நெறிகள் என்னும் கொள்கை கொண்ட தமிழகத்தின் சிறந் நாளேடான தினமலரின் செயல்கள் சிறப்பானது. ஒவ்வொரு ஆண்டிலும் பல்வேறு நாள்களில் பல்வேறு மலர்களை வெளியிட்டு வாசகர் நெஞ்சில் நிற்கும் உங்கள் பணி பாராட்டுக்குரியது.

அவ்வகையில் இவ்வாண்டு தங்கள் நாளிதழின் சார்பாக பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியிடும் பொங்கல் மலருக்காக, 'உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதி இக்கடிதத்துடன் இணைத்து அனுப்பியுள்ளேன்.

உழவுத்தொழிலுக்கு முன்னுரிமை கொடுக்கும் விதமாகத் தங்கள் பொங்கல் மலரின் முக்கியப் பகுதியில் இக்கட்டுரையை இடம்பெறச் செய்து வெளியிடுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இக்கட்டுரையைப் படித்து, அதன்மூலம் விவசாயத்தின் முக்கியத்துவத்தை மக்கள் உணர்ந்து, விவசாயத்தையும், விவசாயிகளையும் மதிப்பார்கள். ஆகையினால் இக்கடிதத்துடன் இணைத்துள்ள இக்கட்டுரையைத் தாங்கள் தங்கள் பொங்கல் மலரின் வெளியிடுமாறு தங்களை பணிவுடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
இப்படிக்கு, 
உங்கள் பெயர்
இடம் : 
தேதி : 

இணைப்பு:
1)உழவுத்தொழிலுக்கு வந்தனை செய்வோம் கட்டுரை. 

உறைமேல் முகவரி : 
பெறுநர்:

தினமலர் ஆசிரியர் அவர்கள், 
தினமலர் நாளிதழ் அலுவலகம்,
சென்னை.

Post a Comment

Previous Post Next Post