தமிழர் திருநாள் பற்றி கட்டுரை எவ்வாறு எழுதுவது என்று இப்போது பார்ப்போம்.
முன்னுரை:
தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு தமிழரும் கொண்டாடும் தமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.
பொருளுரை:
பொங்கல் பண்டிகைக்கு முதல்நாள் கொண்டாடப்படுவது போகிப்பண்டிகை, வீட்டை சுத்தம் செய்து வண்ணம் பூசுவர், பழையன கழிதலும், புதியன புகுதலும் போகிப் பண்டிகையின் சிறப்பு ஆகும்.
பொங்கல் பண்டிகை:
சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் நாளே பொங்கல் பண்டிகை, உழவர்களின் உழைப்பால் விளைந்த பொருட்களான மஞ்சள், இஞ்சி, கரும்பு, வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் போன்றவற்றைப் படைத்து புதுப்பானையில் பச்சரிசி பொங்கலிட்டு பால் பொங்கும் போது ' பொங்கலோ பொங்கல்' என மகிழ்ச்சியுடன் ஓசை எழுப்புவர்.
மாட்டுப்பொங்கல்:
பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகின்றது. மாடுகளுக்கு நன்றி கூறும் வகையில் மாடுகளை குளிப்பாட்டி அலங்கரித்து வழிபடுவதுதான் மாட்டுப்பொங்கல்,
முடிவுரை:
தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்துவது பொங்கல் திருநாள் ஆகும். நண்பர்களையும் உறவினர்களையும் உபசரித்தல், உழவுத்தொழிலுக்கு பெருமை சேர்த்தல் போன்ற நற்பண்புகளின் அடையாளமே பொங்கல் பண்டிகையாகும்.
Nice katturi
ReplyDeleteTHANK YOU FOR ESSAY
Delete