மழைநீர் சேமிப்பு கட்டுரை

மழைநீர் சேமிப்பு பற்றி கட்டுரை எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.

குறிப்புச்சட்டம்:

  • முன்னுரை
  • பொருளுரை
  • மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்
  • மழைநீர் சேகரிக்கும் தளங்கள்
  • மழைநீர் சேகரிக்கும் முறை
  • முடிவுரை

முன்னுரை:

நிலம் ,நீர், நெருப்பு, காற்று ஆகாயம் பஞ்ச பூதங்களின் கூட்டு சேர்க்கையால் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது . அதிலும் நீரின்றி உலகில் எந்த உயிரும் இயங்காது.

நீரின்றி அமையாது உலகு"என்று நீரின் முக்கியத்துவத்தை திருவள்ளுவர் வான்சிறப்பு என்னும் அதிகாரத்தில் சிறப்பித்துக் கூறியுள்ளார். மரத்தின் முக்கியத்துவம் பற்றியும் ,மழைநீரின் முக்கியத்துவம் பற்றியும் இக்கட்டுரையில் காண்போம்.

பொருளுரை:

நம் முன்னோர் மாரியல்லது காரியமில்லை என்று மழையின் முக்கியத்துவத்தை அன்றே கூறியிருந்தனர்.இளங்கோவடிகள் 'மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும்' என்று மழையைப் போற்றி வணங்கி தம் காப்பியத்தை தொடங்கினார்.

மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்:

மரம், செடி, கொடிகள் மழை பெய்வதற்கு முக்கிய காரணிகளாகும். வான்வழி மிதந்து வரும் மேகக் கூட்டங்களைக் குளிரவைத்து மழையாய் பொழியச் செய்வது மரம் ,செடி கொடிகள் தாம்.மக்கள் தொகை பெருக்கத்தால் அவை இருந்த இடங்கள் மக்கள் வாழும் இடங்களாக மாறி வருகின்றன. அதனால் மழை குறைந்து வருகிறது.

மழைநீர் சேகரிக்கும் தளங்கள்:

மழைநீரை பல்வேறு வழிகளில் சேகரிக்கலாம்.மொட்டை மாடியில் விழும் மழைநீரை குழாய்கள் மூலம் தரைப்பகுதிக்கு கொண்டு வந்து கிணற்றுக்கும், வீட்டு சுவருக்கும் இடையில் தொட்டி அமைத்துச் சேகரிக்க வேண்டும். அங்கு வடிகட்டிய பின்னர் திறந்தவெளி கிணற்றுக்குள் மழை நீரை விழச்செய்து சேகரிக்கலாம்.

மழைநீர் சேகரிக்கும் முறை:

திறந்தவெளிக் கிணறுகள் இல்லாத வீடுகளில் மொட்டை மாடியில் இருந்து கொண்டுவரப்படும் மழைநீரை சிறு கால்வாய் மூலம் வடிகட்டும் தொட்டிக்குள் பாய்ச்சவேண்டும். அங்கிருந்து சிறு தொட்டிக்குள் மழைநீரைச் செலுத்தி சேகரிக்கலாம்.

திறந்த வெளிகளில் அல்லது வீட்டை சுற்றி தேங்கும் மழைநீரைக் கசிவு நீர்க் குழிகள், கசிவு நீர்ப்படுகை, துளை உள்ள நீர்ப் படுகைகள் நிறைந்த ஆழமுள்ள நீரூற்றுக் கிணறுகள் ஆகியவற்றின் மூலம் சேர்த்து மழைநீரை சேகரிக்கலாம்.

முடிவுரை:

மழைநீரைச் சேமிப்போம். வாழ்விற்கு வளம் சேர்ப்போம். விண்ணின் மழைத்துளி மண்ணின் உயிர்த்துளி என்பதை உணர்ந்து செயல்படுவோம்.

மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்! மழைநீரைப் பேணிக்காப்போம்! வளமாக வாழ்வோம்!

Related: மழைநீர் சேமிப்பு கட்டுரை மாதிரி-2

Related: மழைநீர் சேமிப்பு கட்டுரை மாதிரி-3

2 Comments

  1. I want மாவட்டம் காக்கும் மழைத்துளி கட்டுரை

    ReplyDelete
Previous Post Next Post