தடுப்பூசி என்றால் என்ன?

தடுப்பூசி என்றால் என்ன?

தடுப்பூசி என்பது ஆன்டிஜென்களையோ அல்லது ஆன்டிபாடிகளையோ கொடுத்து நோய்க்கு எதிராக தடுப்பினை ஏற்படுத்தும் செயல் ஆகும். தடுப்பு மருந்தினை உடலினுள் செலுத்தி நோயினைத் தடுக்கும் செயல்தடுப்பூசி போடுதல் எனப்படுகிறது. நோயானது பரவுவதைத் தடுப்பதில் ஒரு முக்கிய சிறப்பு வாய்ந்த முறையாக இருப்பது நோயினை எதிர்க்கும் அளவிற்கு ஓம்புயிரியை வழுவேற்றுதல் ஆகும். இந்தநி கழ்வு நோய் எதிர்ப்பு திறனூட்டலால் நிறைவேற்றப்படுகிறது. நவீன மருத்துவத்தின் செலவு குறைந்த, சிறப்பான நோய் எதிர்க்கும் கருவியாக இது காணப்படுகிறது.

ஏன் தடுப்பூசி போட வேண்டும்?


ஒரு சமுதாயத்திலுள்ள பெரும்பகுதியினர் ஒரு குறிப்பிட்ட நோய்க்கெதிராக நோய் எதிர்ப்பு திறனூட்டலைப் பெற்றுக்கொண்டால் அதே சமூகத்தில் மற்ற மக்களுக்கு இந்த நோயானது பரவாது; இதனால் அனைவரும் பயனடைவர்.

தடுப்பூசியிடுதல் நிகழ்வை எட்வர்டு ஜென்னர் என்பவர் அறிமுகப்படுத்தினார். 

உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) அறிக்கையின்படி, மனித குலத்தினிடையே இருந்த பெரியம்மை யானது ஜென்னரின் தடுப்பூசி மூலம் முழுவதுமாக அழிக்கப்பட்டுவிட்டது.

தடுப்பூசி மருத்துகளும் அவற்றின் வகைகளும்:

தடுப்பூசி மருந்துகள் என்பவை உயிருள்ள அல்லது கொல்லப்பட்ட நுண்ணுயிரிகளிடமிருந்தோ அல்லது அவற்றின் விளைபொருள்களின் உதவியுடனோ நோயினைத் தடுக்கவும் அல்லது சிகிச்சை அளிக்கவும் உருவாக்கப்படும் பொருள்களாகும். இந்த தடுப்பூசி மருந்துகள் இரண்டு வகைப்படும். அவையாவன: உயிருள்ள தடுப்பூசி மருந்துகள் மற்றும் கொல்லப்பட்ட தடுப்பூசி மருந்துகள்.

உயிருள்ள தடுப்பூசி மருந்துகள்:

இவைகள் உயிர்வாழும் உயிரிகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.இவ்வுயிரிகளின் நோய்ப் பரப்பும் தன்மையானது வலுவிழக்கச் செய்யப்பட்டு இம்மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. எ.கா. பிசிஜி தடுப்பூசி, வாய்வழி போலியோ சொட்டு மருந்து

கொல்லப்பட்ட தடுப்பூசி மருந்துகள்

வெப்பத்தினாலோ அல்லது வேதிப் பொருள்களாலோ நுண்ணுயிரிகளானவை (பாக்டீரியா அல்லது வைரஸ்) கொல்லப்படுகின்றன. இவற்றின் மூலம் உருவாக்கப்படும் மருந்துகள் கொல்லப்பட்ட அல்லது செயலிழக்கப்பட்ட தடுப்பூசி மருந்துகள் என அழைக்கப்படுகின்றன.

இவைகளுக்கு ஒரு முதன்மையான ஊட்டமும் (dose) மற்றும் அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த வலுவூட்டும் ஊட்டமும் வழங்கப்படவேண்டும். 

எ.கா. டைபாய்டு தடுப்பூசி காலரா தடுப்பூசி, கக்குவான் தடுப்பூசி 

குழந்தைகளுக்கான நோய் எதிர்ப்பு தடுப்பூசி அட்டவணை:

1970 ஆம் ஆண்டு உலக சுகாதாரப் நிறுவனம் குழந்தைகளுக்கான நோய் எதிர்ப்பு திறனூட்டல் அட்டவணையை வழங்கியிருக்கிறது. இந்த அட்டவணையானது அனைத்து நாடுகளிலும் செயல்படுத்தப்படுகிறது. குழந்தைகளை தொற்றுநோய்களிலிருந்து பாதுகாப்பதற்காக எந்த வயது குழந்தைக்கு எந்த தடுப்பு மருந்தை வழங்குதல் வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

குழைந்தைகளுக்கா இந்தியாவில் பின்பற்றப்படும் நோய் எதிர்ப்பு தடுப்பூசி அட்டவணை

வயது தடுப்பூசி மருந்து மருந்தளவு
பிறந்த குழந்தை பிசிஜி 1-வது ஊட்டம் (single dose)
15 ஆம் நாளில் வாய்வழியே போலியோ மருந்து 1-வது ஊட்டம்(single dose)
6-வது வாரம் டபிடீ மற்றும் போலியோ 1-வது ஊட்டம்(single dose)
10-வது வாரம் டபிடீ மற்றும் போலியோ 1-வது ஊட்டம்(single dose)
14-வது வாரம் டபிடீ மற்றும் போலியோ 1-வது ஊட்டம்(single dose)
9-12 மாதங்கள் தட்டம்மை 1-வது ஊட்டம்(single dose)
18-24 மாதங்கள் டபிடீ மற்றும் போலியோ 1-வது ஊட்டம்(single dose)
15 மாதங்கள் முதல் 2 வருடங்கள் எம்.எம்.ஆர் 1-வது ஊட்டம்(single dose)
2-3 வருடங்கள் டிஏபி இரண்டு ஊட்டங்கள் ஒரு மாத இடைவெளியில்
4-6 வருடங்கள் டிடீ மற்றும் போலியோ 2-வது கூடுதல் தடுப்பூசியூட்டம்
10-வது வருடம் டீடீ மற்றும் டீஏபி 1-வது ஊட்டம்(single dose)
16-வது வருடம் டீடீ மற்றும் டீஏபி 2-வது கூடுதல் தடுப்பூசியூட்டம்

பிசிஜி (பேசில்லஸ் கால்மெட்டெகுயிரின்): 

இந்த மருந்தானது, கால்மெட்டே மற்றும் குயிரின் என்ற பிரான்சு நாட்டு ஊழியர்களால் 1908 முதல் 1921 வரை, 13 ஆண்டுகளின் முடிவில் உருவாக்கப்பட்டது. பேசில்லையானது வலுகுறைக்கப்பட்டு,காசநோய்க்கெதிரான நோய்த் தடுப்பு திறனூட்டலாக பயன்படுத்தப்படுகிறது. 

டிபிடீ (மூன்று நோய் தடுப்பு):

இது ஒரு கூட்டு தடுப்பு மருந்து ஆகும். டிப்தீரியா (தொண்டையடைப்பான்), பெர்டூசிஸ் (கக்குவான் இருமல்) மற்றும் டெட்டனஸ் போன்ற மூன்று நோய்களைத் தடுக்க இக்கூட்டு மருந்து பயன்படுகிறது.

எம்.எம்.ஆர்:

பொன்னுக்கு வீங்கி (Mumps), தட்டம்மை (Measles) மற்றும் ரூபெல்லா தடுப்பு மருந்துகள் வைரஸ் தாக்கத்திற்கு எதிராக பாதுகாப்பை அளிக்கின்றன. 

டி.டீ 

இது இரட்டை ஆன்டிஜென் அல்லது ஒருங்கிணைந்த ஆன்டிஜென் எனப்படும். இது டிப்தீரியா(தொண்டை அடைப்பான்) மற்றும் டெட்டனஸ் போன்ற நோய்க்கெதிரான பாதுகாப்பைத் தருகிறது.

டீடீ (டெட்டனஸ் டாக்சாய்டு): 

இது டெட்டனஸ் பாக்டீரியாவின் நச்சாகும்.

டீ.ஏ.பி (TAB) 

டைபாய்டு, பாராடைஃபி ஏ மற்றும் பாராடைஃபி B போன்ற நோய்களுக்கான தடுப்பு மருந்தாகும்.

Post a Comment

Previous Post Next Post