திதி சூன்யமும் தீர்வும் | Astrology in tamil 3

திதி என்றால் என்ன?

திதி என்பது சந்திரன் வளர்வதையும் தேய்வதையும் பொறுத்து தினமும் மாறுவது ஆகும். அமாவாசை முதல் பௌர்ணமி வரை உள்ள திதிகள் வளர்பிறை திதிகள் என்றும், பௌர்ணமி முதல் அமாவாசை வரை உள்ள திதிகள் தேய்பிறை திதிகள் என்றும் அழைக்கப்படுகிறது.

திதி சூன்யம் என்றால் என்ன?

சூன்யம் என்றால் பூச்சியம் என்று பொருள் அதாவது ஒரு குறிப்பிட திதியில் பிறந்தால் குறிப்பிட ராசிகள் சூன்யம் ஆகும். அதாவது பலத்தை இழக்கும் என்று அர்த்தம். மற்றும் அந்த ராசிக்குரிய பாவங்களும், அந்த ராசிக்குரிய காரக கிரகங்களின் காரகமும் கெட்டு அந்த ஜாதகர் துன்பப்படுவார்.

அதன்பட்டியல் கீழே,

திதி திதிசூன்ய ராசிகள் ராசி அதிபதிகள்
பிரதமை துலாம், மகரம் சுக்கிரன் சனி
துதியை தனுசு, மீனம் குரு
திருதியை சிம்மம், மகரம் சூரியன், சனி
சதுர்த்தி ரிஷபம்,கும்பம் சுக்கிரன், சனி
பஞ்சமி மிதுனம்,கன்னி புதன், புதன்
சஷ்டி மேஷம், சிம்மம் செவ்வாய், சூரியன்
சப்தமி கடகம், தனுசு சந்திரன்,குரு
அஷ்டமி மிதுனம், கன்னி புதன்
நவமி சிம்மம், விருச்சிகம் சூரியன், செவ்வாய்
தசமி சிம்மம், விருச்சிகம் சூரியன், செவ்வாய்
ஏகாதசி தனுசு,மினம் குரு
துவாதசி மகரம், துலாம் சனீஸ்வரர், சுக்கிரன்
திரயோதசி ரிசபம், சிம்மம் சுக்கிரன், சூரியன்
சதுர்தசி மிதுனம்,கன்னி,தனுசு,மீனம் புதன்,குரு
அமாவாசை, பௌர்ணமி திதிகள் திதி சூன்யம் இல்லை -------
அமாவாசை, பௌர்ணமி திதியில் திதி சூன்யம் இல்லை. இருந்தாலும் அமாவாசையில் கடகராசியும், பௌர்ணமயில் சிம்மராசியும் திதி சூன்யம் என்று சில நூல்கள் கூறுகின்றன.

உதாரணமாக ஒருவர் வளர்பிறை பஞ்சமி திதியில், ரிசபம் லக்கினத்தில் பிறந்துள்ளான் எனக்கொண்டால், அவருக்கு திதி சூன்ய ராசிகள் மிதுனம், கன்னி அந்த ராசிக்குரிய ஆட்சி கிரகம் புதன் ஆகும். இவர் பிறந்தது ரிசபம் லக்கினம். ரிசப லக்கினத்திற்கு மிதுனம், கன்னி ராசிகள், 2. 5ம் வீடாக வரும். மற்றும் புதன் சமயோசித புத்தி மற்றும் கல்வி. வியாபாரம், மற்றும் தாய்மாமன் போன்ற காரகங்களை தன்னகத்தே கொண்டவர்.

ஆக அந்த ஜாதகருக்கு 2, 5 ம்பாவக விசயத்தில் பிரச்சனை ஏற்படும். எப்படி எனில் பணவரவில் பிரச்சனை, குடும்பத்தில் குழப்பம். மற்றும் குழந்தை பாக்கியம், பூர்வீக சொத்து, பாட்டன் போன்ற விசய பலன்கள் தீமையில் முடியும். மற்றும் புதன் கிரக காரக பலனும் ஜாதகருக்கு எதிர்மறையாக கிடைக்கும்.

திதி சூன்யத்திற்கு தீர்வு:

திதி சூன்யத்திற்குரிய தேவதைகளை வழிபட்டால் திதி சூன்யத்தின் தாக்கம் குறையும்.

திதிகளுக்குரிய தேவதைகளின் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


திதி தேவதை
பிரதமை துர்க்கை
துதியை கிருஷ்ணர்
திருதியை சந்திரன் மற்றும் சிவ வழிபாடு
சதுர்த்தி விநாயகர்
பஞ்சமி இந்திரர்
சஷ்டி முருகன்
சப்தமி சூரியன்
அஷ்டமி இலட்சுமி
நவமி சரஸ்வதி
தசமி வீரபத்திரர்
ஏகாதசி பார்வதி
துவாதசி விஷ்ணு
திரயோதசி பிரம்மா
சதுர்தசி ருத்ரன்

Post a Comment

Previous Post Next Post