இந்திய திட்டமிடுதல் முறைகள்

ஹெராட் டோமர் மாதிரி 

முதலாவது ஐந்தாண்டுத் திட்டத்தின்போது இம்முறை பின்பற்றப்பட்டது. மூலதன குவிப்பை இரு நோக்கங்களுக்காகப் பயன்படுத்திட அறிவுறுத்தியது.ஒரு புறம் தேசிய வருவாயை உயர்த்தியும் மறுபுறம் உற்பத்தியைப் பெருக்கியும் நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல அறிவுறுத்தியது 

நேரு - மஹோல்நபிஸ் மாதிரி

இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின்போது இம்முறை பின்பற்றப்பட்டது ரஷ்யாவை மாதிரியாகக் கொண்டு தொழில்வளர்ச்சி மூலம் முன்னேற்றமடையத் திட்டமிடல் என்பதே இதன் அடிப்படை. இதில் நுகர்வோர் மற்றும் மூலதனத்துடன் அரசுப் பொதுத்துறை மூலம் நாட்டின் வளர்ச்சியை அடைதல் என்பது முக்கிய நோக்கமாகும். கனரகத் தொழில்கள் மூலம் வேகமான தொழில் வளர்ச்சி என்பது இம்முறையாகும். 

காந்திய மாதிரி

கடையனுக்கு கடைத்தேற்றம் என்பதே நோக்கம். 1944 ல் எஸ்.என். அகர்வால் என்பவரால் வெளியிடப்பட்டது. ஜனதா ஆட்சியின்போது சுழல்திட்ட காலத்தில்பயன்படுத்தப்பட்டது. வேளாண்மை கிராமத்தொழில்கள் கைவினைத் தொழில்கள், சிறுதொழில்கள் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. கலாச்சாரத்துடன் இணைந்த அடிப்படை வாழ்க்கைத் தர மேம்பாட்டு நோக்கம் கொண்டது. 

LPG மாதிரி

ராவ் - மன்மோகன் மாதிரி எனவும் அழைக்கப்படுகிறது. எட்டாவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் செயல்படுத்தப்பட்டது. பொதுத்துறைக்கு என ஒதுக்கப்பட்ட பல்வேறு துறைகளில் தனியாருக்கும் அனுமதி வழங்கல், கட்டாய உரிமம், கெடுபிடிகளைக் குறைத்தல் போன்றவற்றை உள்ளடக்கியது. அந்நிய முதலீடுகளைப் பல்வேறு துறைகளில் ஈர்த்தல், இறக்குமதிக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தல் போன்ற சந்தைப் பொருளாதார நடவடிக்கைகளுக்கு அனுமதி. தாராளமயமாக்கல், தனியார் மயமாக்கல், உலக மயமாக்கல் என்பவை இம்மாதிரியின் முக்கிய அம்சங்கள் 

PURA மாதிரி

Providing Urban Amentities in Rural Areas, (PURA). கிராமப்புறங்களிலும் அனைத்து நகர்புற வசதிகள் கிடைக்கப் பெற வேண்டும் என்ற அப்துல் கலாம் அவர்களின் யோசனையே இம்மாதிரி ஆகும்.  கிராமப்புறங்களிலும் பொருள் சார்ந்த, மின்னனு சார்ந்த அறிவு சார்ந்த மற்றும் பொருளாதாரம் சார்ந்த அனைத்தும் கிடைக்கப் பெறல் வேண்டும் என்பதாகும். இது பத்தாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் செயல்படுத்திப் பார்க்கப்பட்டது. 

திட்டக்குழு உருவாக்கம்

1950 ல் தேசியத் திட்டக்குழு ஜவஹர்லால் நேரு தலைமையில் உருவாக்கப்பட்டது. இது மத்திய கேபினட் சபையின் தீர்மானம் மூலம் உருவாக்கப்பட்டது. இதன் முக்கிய பணி “நாட்டு வளங்களை சீரிய மற்றும் பயனுள்ள வகையிலும் மற்றும் சமமாகப் பயன்படுத்தவும் திட்டங்களைத் தீட்டுதல்" ஆகும். இத்திட்டக்குழுவே சந்தாண்டுத் திட்டங்களை வகுக்கிறது. தற்பாது நாம் பன்னிரெண்டு ஐந்தாண்டுத் திட்டங்களை நிறைவு செய்துள்ளோம். 

தேசிய மேம்பாட்டுக் குழு

1952 ஆகஸ்டு 6 ல் உருவாக்கப்பட்டது தலைவர் - பிரதமர் மற்ற உறுப்பினர்கள் மத்திய கேபினட் மந்திரிகள், முதல்வர்கள் அனைத்து மாநில நிதி மந்திரிகள், யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர்கள் மற்றும் மத்திய அரசால் ஆளப்படும் மாநிலங்களின் ஆளுநர்கள். திட்டக்குழுவினால் உருவாக்கப்படும் அனைத்துத் திட்டங்களும் தேசிய மேம்பாட்டுக் குழுவினால் முதலில் அங்கீகரிக்கப்படும். மத்திய மற்றும் மாநில அரசுகள் மற்றும் திட்டக்குழு ஆகியவற்றுக்கு இடையே பொருளாதார திட்டமிடுதலின் ஒத்துழைப்பைப் பெருக்க உருவாக்கப்பட்டது இது அரசியலமைப்பிற்கு உட்பட்டதும் இல்லை மற்றும் சட்டபூர்வமான அமைப்பும் இல்லை (ஆலோசனை மட்டும் வழங்கும்)

Post a Comment

Previous Post Next Post