திருமண நிதி உதவி திட்டங்கள்

திருமண நிதிஉதவித் திட்டம் என்றால் என்ன?

திருமண நிதியுதவித் திட்டம் என்பது பெண்களின் திருமணத்திற்காக பெண் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு திருமண நிதியுதவி அளிக்கும் வகையிலும், பெண்களில் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையிலும் செயல்படுத்தப்படும் தலையாயத் திட்டமாகும். 

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம்

18 வயது பூர்த்தி அடைந்து 10-ஆம் வகுப்பு படித்த முடிந்த ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு இத்திட்டத்தின் மூலம் திருமண நிதியுதவி அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெறும் பழங்குடி இன பெண்கள் குறைந்தபட்சம் 5 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் பட்டதாரியல்லாதோருக்கு ரூ. 25,000 நிதியுதவியும், பட்டம் பட்டயப் படிப்பு படித்த பெண்களுக்கு

50000 நிதியுதவியும் வழங்குவதுடன் திருமாங்கல்யம் 3 செய்வதற்காக 23.05.2016 முதல் 8 கிராம் (22 கார) தங்கநாணயமும் வழங்கப்படுகிறது. 

இத்திட்டத்தின் கீழ் பயன் அடைவதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டம்

இளம் விதவைகளுக்கு சமூகத்தில் கௌரவம், மரியாதை சமூக ஏற்பு ஆகியவற்றை உறுதி செய்யும் பொருட்டு தமிழக அரசால் பாக்டர் தாமாம்பாள் அம்மையார் நினைவு விதவைமறுமண நிதிஉதவித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 

இத்திட்டத்தின் கீழ், பட்டதாரியல்லாதோருக்கு ரூ. 25,000 நிதியுதவியில் ரூ. 15,000 மின்னணு பரிமாற்ற சேவை வாயிலாகவும், ரூ. 10,000 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும்,பட்டம் / பட்டயப் படிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50,000 நிதியுதவியில் ரூ. 30,000 மின்னணு பரிமாற்ற சேவை வாயிலாகவும், ரூ. 20,000 தேசிய சேமிப்புப் பத்திரமாக வழங்குவதுடன் 23.05.2016 முதல் 8 கிராம் (22 காரட்) தங்க நாணயமும் வழங்கப்படுகிறது. 

இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு வருமான வரம்பு மற்றும் கல்வித்தகுதி ஏதும் நிர்ணயம் செய்யப்படவில்லை.

ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதி உதவித்திடம் . 

இத்திட்டத்தின் கீழ் விதவையர் தம் மகளுக்கு திருமணம் செய்ய உதவிடும் வகையில் பட்டதாரியல்லாதோருக்கு ரூ. 25,000 மும், பட்டப்படிப்பு பட்டயப் படிப்பு படித்த பெண்களுக்கு ரூ 50.000மும், அத்துடன் 23.05.2016 முதல் திருமாங்கல்யம் செய்வதற்கு 8 கிராம் (22 காரட் தங்க நாணயமும் வழங்கப் படுகிறது. 

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72.000க்கு மிகாமல் இருக்க வேண்டும். 

அன்னைதெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதி உதவித் திட்டம் 

ஆதரவற்ற ஏழை பெண்கள் தங்கள் திருமணத்திற்காக இத்திட்டத்தின் மூலம் பயன் பெற தகுதியுடையவராவர்.  பட்டதாரியல்லாத பெண்களுக்கு  ரூ.25,000மும், பட்டப் படிப்பு படித்த பெண்களுக்குரூ.50,000 மும், திருமண நிற்பதவியாக வழங்கப்படுவதுடன் 23.05.2016 முதல் திருமாங்கல்யம் செய்வதற்கு 5 கிராம் (22 கிராட்) தங்க நாணயமும் வழங்கப்படுகிறது. 

இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கு வருமான வரம்பு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதி உதவித் திட்டம் 

சாதி அடிப்படையிலான வேறுபாடுகளைக் களையவும் சமுதாயத்தினரிடையே சமூக சமத்துவத்தை ஊக்குவிக்கும் பொருட்டு அரசால் கலப்புத் திருமண நிதி உதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கலப்புத் திருமணம் செய்யும் தம்பதியரில் பட்டதாரியல்லாதோருக்கு வழங்கப்படும் ரூ. 25,000 நிதி உதவித்தொகையில் ரூ.15,000 மின்னணு பாமாற்ற சேவை வாயிலாகவும், ரூ.10,000தேசிய சேமிப்பு பத்திரமாகவும், பட்டம் /பட்டயப் படிப்பு படித்த பெண்களுக்குரூ.20,000 நிதி உதவித் தொகையில், ரூ. 30,000 மின்னணு பரிமாற்ற சேவை வாயிலாகவும் ரூ.20000 தேசிய சேமிப்பு பத்திரமாக வழங்குவதுடன் 23.05.2016 முதல் 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கு வருமான வரம்பு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை.

Post a Comment

Previous Post Next Post