மின்விளக்கு வசதி வேண்டி நகராட்சி ஆணையருக்கு கடிதம் எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.(மாநகராட்சி என்றால் நகராட்சிக்கு பதில் மாநகராட்சி என மாற்றிக் கொள்ளவும்)
மின்விளக்கு வசதி வேண்டி கடிதம்
அனுப்புநர்
பெயர்,
முகவரி,
இடம்,
மாவட்டம்.
பெறுநர்:
நகராட்சி ஆணையர் அவர்கள்,
நகராட்சி அலுவலகம்,
இடம்,
மாவட்டம்.
ஐயா,
பொருள்: மின்விளக்கு வசதி வேண்டி விண்ணப்பம்.
வணக்கம்,எங்கள் சிற்றாரில் இருநாற்றைம்பது வீடுகள் உள்ளன. அதில் அண்ணா தெருவில் கடந்த இரண்டு மாதங்களாக தெரு விளக்குகள் சரிவர இயங்கவில்லை. நாங்கள் தெருக்களில் மின் விளக்கு இன்றித் துன்புறுகின்றோம். இரவு நேரங்களில் இந்தத் நெருவே இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
மேலும், இந்தத் தெருவில் உள்ள மின் கம்பங்கள் உடைந்து சரிந்து, விழும் நிலையில் உள்ளன. நிலையில் உள்ளன. இரவில் பணிக்குச் சென்று விட்டு நேரங்கழித்து வீடு திரும்புவோர் வாகனங்களில் வரும்போது பள்ளம் மேடு தெரியாமல் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
பெண்களும், குழந்தைகளும் இருளில் வெளியில் வர அச்சமடைகின்றனர். பல திருட்டுகளும் நடைபெறுகிறது, ஆகவே, எங்கள் ஊர்த் தெரு மற்றும் ஊருக்கு வரும் பாதைகளில் போதிய மின்விளக்குகளை அமைத்து தரும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி
நாள்:
இடம்:
இப்படிக்கு,
(உங்கள் பெயர்)
உறைமேல் முகவரி:
பெறுநர்:
நகராட்சி ஆணையர் அவர்கள்,
நகராட்சி அலுவலகம்,
இடம்,
மாவட்டம்.