வர்க்கச் சக்கரங்கள்

நவகிரகங்கள் தான் நம் அனைவரின் வாழ்வையும் இயக்குகின்றன. ஒருவரின் பூர்வ ஜென்ம வினைப்பயனாக வரும் நல்வினை தீவினைகளையும் அதை அனுபவிக்கச் செய்வதும் நவகிரகங்களே. அந்த நவகிரகங்கள் ஒருவரின் ஜாதகத்தில் அமையப் பெற்ற நிலைப்பாடுதான் விதிப்பயனை எடுத்துரைக்கும். அப்படியென்றால், ஒருவர் செய்த பாவ புண்யத்துக்கு ஏற்ப தானே இப்பிறவியில் நாம் அனுபவிக்க வேண்டும். அப்படி நிர்ணயம் செய்ய, செய்ய, நவகிரகங்களும் தாங்கள் பெற்ற பலம் பலவீனமல்லவா இப்பிறவியின் பலனையும் அதன் அளவையும் தரத்தையும் முடிவு செய்யும். அப்படி ஒவ்வொரு கிரகத்தின் பலத்தை நிர்ணயம் செய்ய, ஜோதிட சாஸ்திரத்தை நமக்கு தந்த ரிஷிகள், ஒவ்வொரு ராசியிலும் கிரகங்கள் நின்ற பாகைக்கு ஏற்ப அவை பலம் பெறுகின்றன என்று கண்டு, ராசியை பலவிதமாக வகுத்து பிரித்தார்கள். அதையே வர்க்க நிலை என்கிறோம்.

மகரிஷி பராசரர் தம் பிருகத் பராசர ஹோரா சாஸ்திராவில் பதினாறு வித வர்க்கங்களைப் பற்றிக் கூறியுள்ளார். ஜெயமினி மகரிஷி மேலும் நான்கு வித சக்கரங்கள் பற்றி கூறியுள்ளார். மொத்தம் 20 விதமான வர்க்க சக்கரங்கள். அவர்களின் பெயர்களும் அறியப்படும் பலன்களும் பிரிக்கும் விதமும் பின்வருமாறு.

பிரிவு வர்க்கம் பலன்
1 ராசி அனைத்து பலன்களும்
2 ஹோரா செல்வம் மற்றும் பணம்
3 திரேக்காணம் சகோதரம் பற்றிய அனைத்து விசயங்கள்
4 சதுர்தாம்சம் (அ) துரியாம்சம் சொத்துகள் மற்றும் அதிர்ஷ்டம்
5 பஞ்சமாம்சம் புகழ் அதிகாரம்
6 ஷஷ்டாம்சம் உடல் நலம் நோய்கள்
7 சப்தமாம்சம் குழந்தைகள், பேரன்கள் பற்றி அறிய
8 அஷ்டாம்சம் எதிர்பாராமல் உண்டாகும் துன்பங்கள் வழக்குகள்
9 நவாம்சம் திருமணம், வாழ்க்கை துணை மத கடமைகள், சுயசிந்தனை, பிறருடன் கொள்ளும் தொடர்புகள்
10 தசாம்சம் தொழில் சமூக சேவை செயல்பாடுகளில் சாதனை
11 ருத்ராம்சம் மரணம் மற்றும் அழிவு
12 துவதசாம்சம் பெற்றோர் மற்றும் அவர்களின் இரத்த தொடர்பான உறவுகள் பற்றி
16 சோடசாம்சம் மகிழ்ச்சி, வாகனசுகம்
20 விம்சாம்சம் மதகடமைகள், ஆன்மீக விசயங்கள், உபாசனா தெய்வம்
24 சித்தாம்சம் படிப்பு, கல்வி அறிவு
27 நட்சத்திராம்சம் பாரம்பரிய குணம், பலம்,பலவீனம்
30 திரிம்சாம்சம் தீங்கு, தண்டனை,உள்உணர்வு, ஆழ்மனம்.

Post a Comment

Previous Post Next Post