சிலப்பதிகாரத்தில் மாதவி பதினோரு வகை ஆடல்களை ஆடினாள். அவையாவன;
- அல்லியம்
- கொடுகொட்டி
- குடைக்கூத்து
- குடக்கூத்து
- பாண்டரங்கம்
- மல்லியம்
- தடி
- கடையம்
- பேடு
- மரக்கால்
- பாவை
முதல் ஆறு நின்றாடல் எனவும் அடுத்த ஐந்து வீழ்ந்தாடல் எனவும் அழைக்கப்படுகிறது.
நடனத்தின் பொழுது ஒரு கையினால் காட்டப்படும் முத்திரைகளும் இரு கைகளினால் காட்டப்படும் முத்திரைகளும் கூறப்பட்டுள்ளன. பிண்டி, பிணையல், எழிற்கை, தொழிற்கை எனப் பகுக்கப்பட்டுள்ளன, பிண்டி, பிணையல் இரண்டும் புறக்கூத்தில் காட்டப்படுவன.
எழிற்கை, தொழிற்கை இரண்டும் அகக்கூத்தில் காட்டப்படுவன. இவற்றில் பிண்டி ஒரு கையால் காட்டப்படும் முத்திரை. இது 24 வகையாக அமையும், பிணையல் இரண்டு கைகளாலும் காட்டப்படுவது, இது 13 வகையாக உள்ளது.
ஆடல் | ஆடல் நோக்கம் |
---|---|
அல்லியம் | கண்ணன் யானையின் தந்தத்தை ஒடித்ததைக் காட்டும் |
கொடுகொட்டி | சிவபெருமான் முப்புரத்தை எரித்த பொழுது வெற்றியில் கைகொட்டி ஆடிய ஆடல் |
குடைக்கூத்து | முருகன் அவுணரை வென்ற போது ஆடிய ஆடல் |
குடக்கூத்து | கண்ணன் தன் பேரனான அநிருத்தனை அசுரரிடமிருந்து மீட்பதற்காகக் குடத்தை வைத்துக் கொண்டு ஆடிய ஆடல் |
பாண்டரங்கம் | சிவபெருமான் முப்புரத்தை எரித்த பின்னர் நான்முகன் காணும்படி ஆடிய ஆடல் |
மல்லியம் | கண்ணன் வாணன் என்னும் அசுரருடன் போர் செய்ததைக் காட்டும் கூத்து |
தடி | சூரபதுமனை வென்ற பிறகு கடலினை மேடையாகக் கொண்டு முருகன் ஆடியதைக் கூறும் கூத்து |
கடையம் | இந்திரன் மனைவி அயிராணி உழத்தி உருவத்தோடு ஆடியது. இது உழத்திக்கூத்து என்றும் அழைக்கப்படுகிறது |
பேடு | காமன் தன்மகனான அநிருத்தனை சிறை மீட்பதற்காக வாணனுடைய சோ என்னும் நகரத்தில் பேடியுருவம் கொண்டு ஆடியது. |
மரக்கால் | கொற்றவை தன்னை எதிர்த்து பாம்பு, தேளாக வந்த அசுரரைக் கொல்வதற்காக ஆடிய ஆடல் |
பாவை | அசுரரை வெல்ல திருமகள் ஆடிய ஆடல் |
Tags:
தமிழ்நாடு