மோடியை பிரச்சாரத்திற்கு அழைக்கும் தி.மு.க வேட்பாளர்கள்


2021 சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற இருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில் இன்று தி.மு.க வேட்பாளர்கள் பலர் தங்கள் twitter பக்கத்தில் மோடியை டேக் செய்து தங்கள் தொகுதிக்கு பிரச்சாரம் செய்ய வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வஞ்சப்புகழ்ச்சியணியில் நக்கலாக தி.மு.க வேட்பாளர்களால் பதிவிடப்பட்ட டிவிட்டுகள் நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

திருச்சுழி தொகுதி தி.மு.க வேட்பாளர் தங்கம் தென்னரசு தனது டிவிட்டர் பக்கத்தில் மோடியை டேக் செய்து

நான் திருச்சுழி தொகுதி வேட்பாளர் தங்கம் தென்னரசு அன்பிற்குரிய நரேந்திர மோடி அவர்களே தாங்கள் திருச்சுழி தொகுதியில் வந்து பிரச்சாரம் செய்தால் நான் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற உதவியாக இருக்கும். நன்றி 

என்று தெரிவித்துள்ளார். 

இதேபோல் பல தி.மு.க வேட்பாளர்களும் தங்கள் twitter பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.


Post a Comment

Previous Post Next Post