கருப்பு பூஞ்சை (மியூகோமைகோசிஸ்)

கருப்பு பூஞ்சை (மியூகோமைகோசிஸ்) என்றால் என்ன?



மியூகோமைகோசிஸ் என்பது ஒரு பூஞ்சை தொற்று ஆகும், இது முக்கியமாக மற்ற உடல்நலப் பிரச்சினைகளுக்காக மருந்துகளை உட்கொள்ளும் மக்களைப் பாதிக்கிறது, இது நோய்க்கிருமிகளுடன் போராடும் திறனைக் குறைக்கிறது.

பூஞ்சை வித்துகளைக் காற்றிலிருந்து சுவாசித்த பிறகு அத்தகைய நபர்களின் சைனஸ்கள் அல்லது நுரையீரல் பாதிப்புக்குள்ளாகும்.

அறிகுறிகள்:

  • கண்கள் மற்றும் / அல்லது மூக்கைச் சுற்றி வலி மற்றும் சிவத்தல்
  • காய்ச்சல் 
  • தலைவலி 
  • இருமல் 
  • மூச்சுத் திணறல் 
  • இரத்த வாந்தி 
  • மனநிலையில் மாற்றம்

கருப்பு பூஞ்சை (மியூகோமைகோசிஸை) முன்னரே கண்டறிய உதவும் காரணிகள்?

  • கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய் ஸ்டெராய்டுகளால் ஏற்படும் நோயெதிர்ப்பு தடுப்பு
  • தீவிர சிகிச்சைப் பிரிவில் நீண்டகால பராமரிப்பு 
  • இணை நோய்கள் - உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வேகமாகப் பரவக்கூடிய நோய்கள் 
  • பூஞ்சை காளான் சிகிச்சை

எப்போது மியூகோமைகோசிஸ் எனச் சந்தேகிக்க வேண்டும்?

(COVID-19 நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள் அல்லது நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபர்களில்)

  • சைனசிடிஸ் - மூக்கு அடைப்பு அல்லது நெரிசல், நாசி ஒழுக்கு (கறுப்பு / இரத்த நிறத்தில்), கன்னத்தில் ஏற்படும் வலி
  • ஒரு பக்க முக வலி, உணர்வின்மை அல்லது வீக்கம்
  • மூக்கு / மேல் வாய் பகுதியின் மீது கறுப்பு நிறமாற்றம்.
  • பல் வலி, பற்களில் தளர்வு.
  • வலியுடன் கூடிய மங்கலான அல்லது இரட்டை பார்வை; காய்ச்சல், தோல் புண்; இரத்த உறைவு & உடல் செல்களின் அழிவு (அழிந்த செல்கள் உதிர்தல்)
  • நெஞ்சு வலி, நுரையீரலுக்கும் நெஞ்சுக்கும் இடையில் நீர் கோர்ப்பு, சுவாசக் குழாயில் இரத்தம் வருதல், சுவாச மண்டலம் மோசமடைவதற்கான அறிகுறிகள்.

செய்ய வேண்டியவை

  • இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை கட்டுக்குள் வைக்க வேண்டும்.
  • இரத்தக் குளுக்கோஸ் அளவை COVID-19 தொற்றிலிருந்து குணமடைந்த பின்னரும் நீரிழிவு நோயாளியாக இருக்கும் பட்சத்திலும் கண்காணிக்க வேண்டும். 
  • ஸ்டெராய்டுகளை சரியான முறையில் பயன்படுத்தவும் - சரியான நேரம், சரியான அளவு மற்றும் சரியான காலம்.
  • ஆக்ஸிஜன் சிகிச்சையின் போது ஈரப்பதமூட்டிகளுக்கு சுத்தமான நீரைப் பயன்படுத்துங்கள். 
  • ஆண்டிபயாடிக் பூஞ்சை காளான் மருந்துகளைக் கவனமாகப் பயன்படுத்துங்கள்.

செய்யக் கூடாதவை

  • எச்சரிக்கை அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்.
  • மூக்கு அடைப்பு எப்போதும் பாக்டீரியா சைனசிடிஸாக இருக்கும் எனக் கருத வேண்டாம், குறிப்பாக நோயெதிர்ப்புத் தடுப்பு மற்றும் / அல்லது இம்யூனோமோடுலேட்டர்கள் பயன்படுத்தும் COVID-19 நோயாளிகள் தயக்கப்படாமல் பூஞ்சை நோய்க்குறியீட்டைக் கண்டறிவதற்குப் பொருத்தமான பரிசோதனைகளை மேற்கொள்ளவும் (KOH சோதனை, MALDI-TOF)
  • மியூகோமைகோசிஸிற்கான சிகிச்சையைத் தொடங்குவதில் தாமதம் வேண்டாம்.

Post a Comment

Previous Post Next Post