அஸ்வினி நட்சத்திரம் சூரியனின் கர்ம பதிவை கொண்ட நட்சத்திரம்.
அஸ்வினி நட்சத்திரத்துக்கு சூரியனின் கர்ம பதிவு எப்படி வந்தது என்று இப்போது பார்ப்போம்.
சூரிய தேவரின் மனைவி சஞ்சனா தேவி. சஞ்சனா தேவி விஸ்வகர்மாவின் புதல்வி. சஞ்சனா தேவி சூரியனை முழு மனதாக தன்னுடைய கணவனை ஏற்றுக்கொண்டு அவரோட வாழ ஆரம்பிக்கிறார். சஞ்சனா ரொம்ப அழகா இருப்பார்கள்.சூரிய தேவருக்கு சஞ்சனா தேவி அழகா இருப்பதால் அவர் அழகின் மீது கர்வம் கொண்டுள்ளார் என்னும் எண்ணம் அவருக்கு தோன்றுகிறது. ஒரு முறை சஞ்சனா தேவி உடன் சூரிய தேவர் உடல் ரீதியாக சேர நெருங்கும் போது சஞ்சனா தேவியால் சூரிய தேவரின் ஒளியை சஞ்சனா தேவியால் தாங்க முடியாமல் கண்ணை மூடினார்கள். ஆனால் தன்னை பிடிக்காமல்தான் சஞ்சனா தேவி கண்ணை மூடிக்கொண்டதாக சூரிய தேவர் தவறாக நினைத்து கொண்டார். இதனால் சஞ்சனா தேவி மீது ரொம்ப கோவப்படுகிறார். எந்த தப்பும் செய்யாத போதும் சூரிய தேவரின் கடினமான முகத்தையே சஞ்சனா தேவியால் அன்றிலிருந்து பார்க்க நேர்ந்தது.
சஞ்சனா மிகவும் மனசு கஷ்டப்பட்டு விஸ்வகர்மா (சஞ்சனா தேவி தந்தை) விடம் போய் தன் நிலையை சொல்லுவோம் என்று நினைத்தார்.
தான் வீட்டில் இல்லை என்றால் சூரிய தேவர் தவறாக நினைத்து விடுவார் என்று தன்னை மாதிரியே ஒரு நிழல் உருவம் செஞ்சாங்க (தற்போது குளோனிங் முறை என்று பரவலாக மக்களால் அறியப்படுகிறது).
அவர்கள் பெயர் சாயா தேவி. இவர்கள் தான் நவக்கிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரரின் தாய்.
சாய் தேவியை தன் இல்லத்தில் விட்டு விட்டு தன் தந்தையை பார்க்க செல்கிறார் சஞ்சனா தேவி.
சஞ்சனா தேவி தனக்கு நேர்ந்ததை எல்லாம் தனது தந்தை விஸ்வகர்மாவிடம் கூறுகிறார். விஷ்வகர்மா என்னதான் நடந்தாலும் சரி உன்னுடைய கணவருடைய மனசு கஷ்டப்படுற மாதிரி நீ நடந்து விட்டது தப்பு. நீ உன் கணவர் வீட்டுக்கே செல் என்று புத்திமதி கூறுகிறார்.
தந்தையின் இந்த கூற்றை கேட்ட சாயாதேவி கோபத்தில் தவம் இருக்க செல்கிறார். காலம் செல்லச் செல்ல சாய் தேவி தன் மனைவி அல்ல என்று உணர்ந்தார் சூரிய தேவர்.
விஸ்வகர்மாவிடம் நடந்ததை கூறுகிறார். விஸ்வகர்மா உங்கள் ஒளி தாங்க முடியாமல் தான் சஞ்சனா கண்ணை மூடினாள் என்றும் நீங்கள் சஞ்சனாவை தவறாக புரிந்து கொண்டீர்கள் என்றும் சூரிய தேவரிடம் உண்மையை கூறுகிறார்.
இதனால் மனம் வருந்திய சூரிய பகவான் தன் மனைவியை தவறாக நினைத்து விட்டோம் என்று வருந்தி, சஞ்சனா தேவியை தேடிச் சென்றார். சஞ்சனா தேவி குதிரை வடிவில் இருந்தார் (தாம் யார் என்று மற்றவர்களுக்கு தெரிய கூடாதென்று குதிரை வடிவம் எடுத்தார்).
சூரிய தேவரும் குதிரை வடிவம் எடுத்து சஞ்சனா தேவியோடு இணைய முற்படும் போது அவருக்கு சுக்லம் வெளி வர சஞ்சனா தேவி யோனிக்குள் எப்படியாவது செலுத்தி விட வேண்டும் என்று நினைக்கிறார்.
ஆனால் சஞ்சனா தேவி வந்திருப்பவர் சூரிய தேவர் என்பதை அரியவில்லை. இதனால் அவரை பார்த்து பயந்து ஓடுகிறார். மேலும் சூரிய தேவருக்கு சாபமும் வழங்குகிறார்.
குதிரை வடிவில் சூரிய தேவரும் சஞ்சனா தேவியும் இருக்க பிறந்தவர்கள் தான் அஸ்வினி குமாரர்கள்.
பின் சூரிய தேவர் தன் ஒளியை எட்டில் ஒரு பங்கு குறைத்து கொண்டு சஞ்சனா தேவியுடன் வாழ்கிறார்.
மருத்துவ கடவுளான சூரியன் தன் புதல்வர்களில் அஸ்வினி குமார்களுக்கு மட்டுமே மருத்துவத்தை கற்று தந்தார்.
இப்படித்தான் அஸ்வினி நட்சத்திரத்துக்கு சூரியனின் கர்ம பதிவு வந்தது.இதுதான் அஸ்வினி நட்சத்திரம் குறித்து புராணம் சொல்கிறது.
அஸ்வினி நட்சத்திரம் மருத்துவததோடு தன்னை எப்போதும் தொடர்பு படுத்தி கொள்ளும். அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மருத்துவம் பிடிக்காவிட்டாலும் அடுத்தவர்களுக்கு அதிகம் மருத்துவ ஆலோசனை தருபவர்களாக இருப்பார்கள்.
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வம்சாவளியில் இரட்டை குழந்தைகள் பிறந்திருக்க அல்லது இனிமேல் பிறக்க வாய்ப்பு உண்டு. மேலும் இவர்கள் வம்சாவளியில் மருத்துவம் தெரிந்தவர்களும் இருக்க வாய்ப்பு உண்டு.
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களோ அல்லது லக்னம் அஸ்வினி நட்சத்திரத்தில் நிற்க பிறந்தவர்களோ அல்லது லக்ன அதிபதி அஸ்வினி நட்சத்திரத்தில் நிற்க அவர்களுக்கு சூரியனின் கர்ம பதிவு ஏதேனும் ஒரு வகையில் இருக்கும்.