வங்கி மேலாளருக்கு நமது வங்கி கணக்கை மைனர் அக்கௌன்டில் இருந்து மேஜர் அக்கௌன்டிற்கு மாற்ற கடிதம் எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.
அனுப்புநர்
பெயர்,
முகவரி,
இடம்.
பெறுநர்
வங்கி மேலாளர் அவர்கள்,
வங்கியின் பெயர்,
இடம்.
ஐயா,
பொருள்: வங்கி கணக்கை மைனர் அக்கௌன்டில் இருந்து மேஜர் அக்கௌன்டிற்கு மாற்றுதல் தொடர்பாக.
வணக்கம், நான் தங்கள் வங்கி கிளையில் அக்கௌன்ட் வைத்திருந்தேன். தற்போது எனக்கு 18 வயது பூர்த்தியாகிவிட்டது. எனவே எனக்கு எனது வங்கி கணக்கை மைனர் அக்கௌன்டில் இருந்து மேஜர் அக்கௌன்டிற்கு மாற்றி தருமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் எனக்கு ஏ.டி.எம் கார்டு, இன்டர்நெட் பேங்கிங் போன்ற வசதிகளும் செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன். எனது வங்கி கணக்கு எண்---------------------. எனது தொலைபேசி எண்--------------. இத்துடன் எனக்கு 18 வயது பூர்த்தியானதற்கான ஆவணங்களை இணைத்துள்ளேன்.
நன்றி
இப்படிக்கு,
(கையொப்பம்)
இணைப்பு:
1) ஆதார் அட்டை
Tags:
letter