மேல்நிலைப் பள்ளி வேண்டி பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு கூட்டு விண்ணப்பம் எப்படி எழுதுவது என்று இப்போது பார்ப்போம்.(இங்கு கொடுக்கப்பட்டுள்ள பெயர் மற்றும் முகவரி உதாரணத்திற்கு மட்டுமே)
அனுப்புநர்
ஊர் பொதுமக்கள்,
இலுப்பைக்குளம்,
காரியாபட்டி வட்டம்,
விருதுநகர் மாவட்டம்
பெறுநர்
மாண்புமிகு கல்வி அமைச்சர்,
தமிழக அரசு தலைமைச் செயலகம்,
சென்னை - 600 009.
மாண்புமிகு அமைச்சர்
எங்கள் ஊர் இலுப்பைக்குளம் காரியாபட்டியில் இருந்து பதிமூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. எங்கள் ஊர் உயர்நிலைப் பள்ளிப் பிள்ளைகள் காரியாபட்டி சென்று கல்வி கற்கத் துன்பப்படுகின்றனர். பேருந்துப் போக்குவரவும் வசதியாக இல்லை. இங்குள்ள பெரும்பான்மையான மக்கள், பிள்ளைகளை வெளியூர் அனுப்பிப் படிக்க வைக்க இயலா ஏழ்மை நிலையில் உள்ளனர். இவ்வூரில் உள்ள தனியார் உயர்நிலைப் பள்ளியில் 1000 மாணவர்கள் பயில்கிறார்கள். 200 மாணவர்கள் மேல்நிலைப் படிப்புக்கு வெளியூர் சென்று வருகின்றனர்.பொருள்:மேல்நிலைப் பள்ளி வேண்டுதல்
ஆகவே எங்களூர் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக மாற்றித் தரவோ புதிய அரசு மேல்நிலைப் பள்ளியை ஏற்படுத்தித் தரவோ வேண்டுகிறோம். அரசுத் தரப்பில் மேல்நிலைப் பள்ளி ஏற்படுவதாக இருந்தால் பொது மக்கள் சார்பில் மூன்று ஏக்கர் நிலமும் ரூ.2,00,000 நன்கொடையும், தரத்தயாராக உள்ளோம் என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இடம்: இலுப்பைக்குளம்
நாள்:30/7/2021
தங்கள் உண்மையுள்ள
1) பாண்டியன்
2) அதியமான்
3) ராஜராஜன்
4) சேரலாதன்
உறைமேல் முகவரி
பெறுநர்
மாண்புமிகு கல்வி அமைச்சர்,
தமிழக அரசு தலைமைச் செயலகம்,
சென்னை - 600 009.
Tags:
letter