புது வீட்டிற்கு மின் இணைப்பு வேண்டி மின்வாரியத்திற்கு கடிதம் எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.(இங்கு கொடுக்கப்பட்டுள்ள பெயர் மற்றும் முகவரி உதாரணத்திற்கு மட்டுமே).
அனுப்புநர்
சி.முருகன்,
100, அண்ணா தெரு,
பாண்டியன் நகர்,
மதுரை.
பெறுநர்
பொறியாளர் அவர்கள்,
மின் நிலையம்,
மதுரை.
ஜயா,
பொருள் : புதிதாய்க் கட்டியுள்ள வீட்டிற்கு மின் இணைப்பு வேண்டுதல்.
வணக்கம். மேற்கண்ட முகவரியில் புதிதாய்க் கட்டியுள்ள என் வீட்டிற்கு மின் இணைப்பு வேண்டும். மின்சாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் மின்கம்பி இணைப்பு முதலிய எல்லா வேலைகளும் முடிந்துவிட்டன. மின் துறைப்பணியாளர்களின் தணிக்கையும் நிறைவுற்றது. புதிதாய் மின் இணைப்புப் பெறுவதற்குச் செலுத்தவேண்டிய வைப்புத்தொகை செலுத்துவதற்குரிய பற்றுச்சீட்டை இவ்விண்ணப்பத்துடன் இணைத்துள்ளேன். தாங்கள் இவ்விண்ணப்பத்தை ஏற்று, விரைவில் மின் இணைப்பு வழங்குமாறு தங்களை அன்புடன் வேண்டுகிறேன்.
இடம்: மதுரை
நாள்: 21/7/2021
தங்கள் உண்மையுள்ள,
சி.முருகன்.
உறைமேல் முகவரி :
பெறுநர்:
பொறியாளர் அவர்கள்,
மின் நிலையம்,
மதுரை