பண மோசடி செய்த நபர் மீது புகார் மனு எழுதுதல் - மனு எழுதுவது எப்படி

பண மோசடி செய்த நபர் மீது புகார் மனு  எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.(இங்கு கொடுக்கப்பட்டுள்ள பெயர் மற்றும் முகவரி உதாரணத்திற்கு மட்டுமே)

அனுப்புநர்

சக்தி,

27, வேலவன் தெரு,

பாண்டியன் நகர்,

விருதுநகர்.

பெறுநர்:

உயாதிரு சார்பு ஆய்வாளர் அவர்கள்,

காவல் நிலையம்,

விருதுநகர்.

பொருள் - பணமோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை விட்டுத் தர வேண்டி மனு.

மதிப்பிற்குரிய ஐயா,

மேற்கண்ட முகவரியில் இருந்து வரும் நானும் என் நண்பர்களும் மணிமுத்தாறுக்கு மேலே உள்ள மாகுசோலை சுற்றுலா மையத்தை சுற்றிப்பார்க்க ஆசைப்பட்டு, பயண தூரம் மற்றும் நேர விபரங்களை, மணிமுத்தாறு திரு.அஅஅஅ அவர்களின் மகன் ஆஆஆஆ வை தொடர்பு கொண்டு கேட்ட போது தானே தங்குமிட வசதி மற்றும் உணவு வசதி செய்து தருவதாகவும் தெரிவித்தார், அதற்கு முனபாமாக 4000 தனக்கு வகிக் கணக்கு இலலாததால், தனது நண்பா எனபவரது வங்கிக கணக்கில் செலுத்துமாறு கூறினார்.

அவர் கூறியபடி விருதுநகர் பாரத ஸ்டேட் வங்கி கிளை, சேமிப்புக் கணக்கு எண் 1,2,3,4  ரூபாய் 4000த்தை 30/10/2020 செலுத்தினேன். அதைப் பெற்றுக் கொண்ட அனைத்து வசதிகளும் செய்து விட்டதாக நம்பிக்கை ஏற்படும் வகையில் பேசினார்.

அவருடைய பேச்சை நம்பி, நானும், என் நண்பர்களும் மணிமுத்தாறு வந்து அவரைத் தொடர்பு கொண்டபோது, தன்னால் வரமுடியாததால், தனக்கு வேண்டிய இன்னொருவரை அனுப்புவதாகவும், அவருடைய பெயர் ஏஏஏஏ என்றும், டிவியில் நிருபராக வேலை பார்ப்பதாகவும், சொல்லி எங்களுடன் அனுப்பினார். மாஞ்சோலை சென்று பார்த்த போது, உணவு மற்றும் தங்கும் வசதிகள் எதுவும் செய்யாமல், மேற்படி ஆஆஆஆ எங்களை ஏமாற்றியது தெரிய வந்தது.

கூட்டுச்சதி செய்து, நம்பிக்கை மோசம் செய்த, மேற்படி ஆஆஆஆ மற்றும் அவரது நண்பர்களை அழைத்து, இது போன்ற மோசடிகள், இனிமேல் தொடராமல், நடவடிக்கை எடுத்து, எங்கள் பணம் ரூபாய், 4000ஐ மீட்டுத் தர வேண்டுகிறேன்.

இப்படிக்கு 

தங்கள் உண்மையுள்

முத்து 

இணைப்பு:

1) வங்கியில் பணம் செலுத்திய இரசீது

2) மோசடி செய்தவரின் புகைப்படம்.

Post a Comment

Previous Post Next Post