விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற உன் தோழியைப் பாராட்டிக் கடிதம் வரைக. என்ற கேள்விக்கு எப்படி பதில் அளிப்பது என்று இப்போது பார்ப்போம்.
மதுரை
9/08/2021
அன்புள்ள தோழிக்கு,
நலம், நலமறிய ஆவல். இன்றைய நாளிதழில் சிங்கப்பூரில் நடைபெற்ற தடகள விளையாட்டுப் போட்டியில் நம் நாட்டிற்கு நீ தங்கப் பதக்கத்தை வாங்கித் தரும் அளவு மிகச் சிறப்பாக விளையாடினாய் என்பதைப் படித்தவுடன் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீ பல்லாண்டு வாழவும், பல பரிசுகளை நம் நாட்டிற்குத் தேடித் தரவும் வாழ்த்துகிறேன். உன் பல நாள் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது. தொடர்ந்து முயன்று சாதனை பல புரிய வாழ்த்துகிறேன்.
இப்படிக்கு,
உன் அன்புத் தோழி,
அ அ அ.
உறைமேல் முகவரி:
பெறுநர்:
ப.செந்தூரி,
122, பாரதியார் தெரு,
திருநெல்வேலி.
Tags:
letter