உங்கள் ஊரில் சுகாதார வசதிக்கான கழிப்பறை கட்டித் தருமாறு மாவட்ட ஆட்சியர்க்கு விண்ணப்பம் எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.(இங்கு கொடுக்கப்பட்டுள்ள பெயர் மற்றும் முகவரி உதாரணத்திற்கு மட்டுமே)
அனுப்புநர்
கதிர்வேல்,
ஏழுமலை நகர்,
பழனி.
பெறுநர்
மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
திண்டுக்கல் மாவட்டம்.
ஐயா,
பொருள்: சுகாதார வசதிக்கான கழிப்பறை கட்டித்தருமாறு கோரல் - தொடர்பாக,
வணக்கம் ஏழுமலை நகரில் நாங்கள் பல வருடங்களாய் வசித்து வருகிறோம். ஏறக் குறைய 100 குடும்பங்கள் வாழ்கின்றன. இருப்பினும் இவ்வூரில் சரியான கழிப்பறை வசதி இல்லாத காரணத்தால் குழந்தைகளும், பெண்களும், வயதானவர்களும் பெரிதும் அவதியுறுகிறார்கள்.
வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவையான இவ்வசதியினைச் செய்து தருமாறு தங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம். ஆகையால் தாங்கள் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு விரைவில் எங்களுக்குத் தேவையான கழிப்பறைகளைக் கட்டித்தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இடம்: பழனி
நாள்:06/08/2021
இப்படிக்கு,
கதிர்வேல்.
உறைமேல் முகவரி:
பெறுநர்
மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
திண்டுக்கல் மாவட்டம்.