ஜமாபந்தி பற்றி முழு விளக்கம்

ஜமாபந்தி என்றால் என்ன? ஜமாபந்தியின் நோக்கம் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

 

ஜமாபந்தி 

  1. ஜமாபந்தியின் இன்னொரு பெயர்- வருவாய் தீர்வாயம்
  2. ஜமாபந்தி எங்கு நடைபெறும் , வட்டாட்சியர் அலுவலகம்
  3. ஜமாபந்தி எந்த நாட்களில் - வருடா வருடம் ஏப்ரல்-ஜீன் 30க்குள் நடைபெறும்.
  4. 3ல்கண்ட நாட்களுக்குள் முடிக்காவிடில் மேல் நடத்த யாரிடம் உத்தரவு பெறவேண்டும் - நில நிர்வாக ஆணையர்

ஜமாபந்தியின் நோக்கம்:

  • அரசுக்கு சொந்தமான எல்லா வகையான சொத்துக்களும் வருவாய்நிலை ஆணைகளில் கண்டபடி நிர்வகிக்கப்படுகிறதா என்பதை கண்டறிவதே
  • வ.நி.ஆணை எண்.12ல் கண்டபடி அரசுக்கு வரவேண்டிய நிலத்தீர்வை மற்றும் அனைத்து வருவாய் கணக்குகளும் சரியாக எழுதப்பட்டுள்ளனவா?
  • நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான புள்ளி விபரங்கள் தக்கமுறையில் தரப்பட்டுள்ளனவா?
  • கிராமஃதாலுகா பதிவேடுகள் ஒழுங்காக பராமரிக்கப் பட்டுள்ளனவா?
  • அரசு அலுவலர்கள் அரசு எதிர்பார்க்கும் அளவில் பணி செய்துள்ளனரா?
  • நில ஆக்கிரமிப்பு நடவடிக்கை, நில ஒப்படை மற்றும் கிராம பணிகள் ஒழுங்காக நடைமுறை படுத்தப் பட்டுள்ளனவா?
  • சமூக பாதுகாப்பு திட்டங்கள் பொதுமக்களுக்கு சரியாக சென்று அடைந்துள்ளனவா?
  • அரசு பாக்கிகள் சரியான முறையில் தயாரிக்கப் பட்டுள்ளனவா?

ஜமாபந்தி நடத்தும் அலுவலர்

  1. வருவாய் கோட்டாட்சியர் மற்றும் அவர் தகுதியுடைய மற்ற அலுவலர்
  2.  மாவட்ட வருவாய் அலுவலர் (5ஆண்டுகளுக்கு ஒருமுறை 1 தாலுகா)
  3. மாவட்ட ஆட்சியர் (5ஆண்டுகளுக்கு ஒருமுறை 1 தாலுகா)

Post a Comment

Previous Post Next Post