டிஜி லாக்கர்
துவக்கம்:
2015 ஆம் ஆண்டு டிஜி லாக்கர் திட்டம் தொடங்கப்பட்டது.
குறிக்கோள்:
பொதுப் பயன்பாட்டில் உள்ள அமைப்பில் குடிமக்கள் பகிரக்கூடிய தனிப் பரப்பை அளித்தல்.
திட்ட விளக்கம்:
இந்திய குடிமக்களின் ஆவணங்களை சேமிப்பதற்காக ஒரு பாதுகாப்பான அர்ப்பணிக்கப்பட்ட தனிப்பட்ட மின்னணு சேமிப்பிடம் உருவாக்கப்படும். இந்த டிஜிட்டல் சேமிப்பு திட்டமானது பல்வேறு சான்றளிப்பு அரசுத்துறைகளினால் அளிக்கப்படும் மின் ஆவணங்கள் மற்றும் பான் அட்டை வாக்காளர் அடையாள அட்டை, பல்கலைக்கழக சான்றிதல்கள் போன்ற தனிப்பட்ட ஆவணங்களை சேமிப்பதற்கு பயன்படுத்தப்படும்.
பயன்கள்:
- காகித வடிவிலான ஆவணங்களின் பயன்பாட்டைக் குறைத்தல்.
- அரசு அமைப்புகளால் வழங்கப்படும் ஆவணங்களுக்கு பாதுகாப்பான அணுகலை வழங்கும்.
- குடிமக்கள் அரசு சேவைகளை பெறுவதை எளிதாக்கும்.
- அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களின் சான்றுகள் வழங்களில் உள்ள நிர்வாகத் தீர்மானத்தைக் குறைக்கும்.
Tags:
govt scheme