தெருவில் கொசு மருந்து அடிக்க வேண்டி நகராட்சி சுகாதார அலுவலருக்கு விண்ணப்பம் எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.(இங்கு கொடுக்கப்பட்டுள்ள பெயர் மற்றும் முகவரி உதாரணத்திற்கு மட்டுமே)
அனுப்புநர்
கந்தசாமி,
157, எழில் நகர்,
இலுப்பைக்குளம்,
விருதுநகர்.
பெறுநர்
நகராட்சி சுகாதார அலுவலர்,
நகராட்சி அலுவலகம்,
விருதுநகர்.
ஐயா,
பொருள் : கொசு மருந்து அடித்தல் தொடர்பாக
எங்கள் பகுதி மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியாகும். பலதரப்பட்ட கூலி வேலை செய்பவர்கள் நிறைந்து இருக்கின்றனர். இங்குள்ள கால்வாய்கள் சரியாக பராமரிக்கப்படாததால் அவற்றில் சாக்கடை நாற்றத்துடன் கொசுக்கள் நிறைந்து டெங்கு, மலேரியா நோய்கள் வரும் அபாயம் உருவாகியுள்ளது.எனவே அய்யா அவர்கள் எங்கள் பகுதி மக்கள் நல்ல சுகாதாரத்துடன் வாழ இந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு எங்கள் பகுதிக்கு கொசுமருந்து அடிக்க ஆவண செய்யுமாறு வேண்டுகிறேன்.
நன்றி
இடம்: இலுப்பைக்குளம்
நாள்:01/08/2021
இப்படிக்கு,
கந்தசாமி.
உறைமேல் முகவரி:
பெறுநர்
நகராட்சி சுகாதார அலுவலர்,
நகராட்சி அலுவலகம்,
விருதுநகர்.
Thanks really I do no how to write letters in tamil your only helping me
ReplyDeleteMe too
Delete