புதிதாகத் திறன்பேசி வாங்கியிருக்கும் தங்கைக்கு திறன்பேசி பயன்பாடு குறித்து அறிவுரைகளைக் கூறி கடிதம் ஒன்றை எழுதுக.
157, அண்ணா தெரு,
தெப்பக்குளம்,
மதுரை.
அன்புள்ள தங்கைக்கு,
நலம், நலமறிய ஆவலாக உள்ளேன்.புதிதாக திறன்பேசி ஒன்றை வாங்கியுள்ளதாக அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. எனினும் அதனைப் பயன்படுத்தும் போது சில சங்கடங்களைத் தவிர்க்க சில அறிவுரைகளைக் கூறலாம் என்று நினைத்து இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
தற்காலத்தில் இளைஞர்களுக்கு எவ்வளவுக்கெவ்வளவு பயனாக உள்ளதோ அவ்வளவுக்கவ்வளவு சவாலாகவும் உள்ளது இந்தத் திறன்பேசி. வலை தளங்களைப் பயன்படுத்தித் தேடல், உரையாடல், பதிவேற்றம், பதிவிறக்கம் இவற்றை நாம் எளிதில் செய்யமுடிகிறது. அதில் பல நன்மைகளும், சிலத் தீமைகளும் உள்ளன. அறியாத ஒருவருடன் முகநூல் தொடர்பு நட்பையும் வளர்க்கும், ஆபத்தையும் விளைவிக்கும். புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வது பெண்களுக்குப் பல தொல்லைகளைத் தரும். புலனத்திலும் முகநூலிலும் பகிர்வு செய்யும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானதாக இருந்தால் சட்டரீதியான பிரச்சனைகள் வரும்.
திறன்பேசிகளில் சேமிக்கப்படும் விவரங்கள் இணையத் திருடர்களால் களவாடப்பட வாய்ப்புள்ளது. எனவே கவனம் தேவை. படிக்கும் மாணவர்களை எந்த நேரத்திலும் இணையத்தில் மூழ்கச் செய்கின்றன சில விளையாட்டுகள். இவைகள் கண் பார்வை பாதிப்பு, நரம்பு பாதிப்பு, தூக்கமின்மை, மறதி ஆகியவற்றை உண்டாக்கும். அறிவார்ந்த தேடலுக்கே நாம் திறன்பேசியைப் பயன்படுத்த வேண்டும். எனது வாழ்த்துக்கள்.
இப்படிக்கு,
உன் அன்பு அண்ணன்,
பெ.முத்து
உறைமேல் முகவரி:
பெறுநர்:
லெட்சுமி,
22, காமராஜர் தெரு,
விருதுநகர்.
Ok
ReplyDelete