தொற்றுநோய் பரவலை தடுக்க நகராட்சி ஆணையருக்கு கடிதம் எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.(இங்கு கொடுக்கப்பட்டுள்ள பெயர் மற்றும் முகவரி உதாரணத்திற்கு மட்டுமே)
அனுப்புநர்
முத்து,
2/44,பெரியார் தெரு,
ஸ்ரீவில்லிபுத்தூர்.
பெறுநர்
நகராட்சி ஆணையர் அவர்கள்,
நகராட்சி ஆணையர் அலுவலகம்,
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்டம்.
ஐயா,
பொருள்: பெரியார் தெருவில் தொற்றுநோய் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுதல் தொடர்பாக.
வணக்கம், நாங்கள் வசிக்கும் பெரியார் தெருவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. எங்கள் தெருவில் சிலர் முகக்கவசம் இல்லாமல் சுற்றி திரிகின்றனர். இது பொதுமக்களுக்கு மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அருகில் உள்ள அண்ணா தெரு கொரோனா பாதிப்பால் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த தெருவில் இருந்து எங்கள் தெருவிற்கு ஒரு குறுக்குச் சந்து உள்ளது அதை அடைக்கவில்லை. அந்தக் குறுக்கு சந்தை அடைத்து, முகக்கவசம் அணியாதவர்களை கண்டித்து, எங்கள் தெருவில் கிருமிநாசினி தெளிக்குமாறு சமூக அக்கறையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
நாள்:11/8/2021
இடம்:ஸ்ரீவில்லிபுத்தூர்
இப்படிக்கு,
முத்து.
உறைமேல் முகவரி:
பெறுநர்:
நகராட்சி ஆணையர் அவர்கள்,
நகராட்சி ஆணையர் அலுவலகம்,
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்டம்.