நான் விரும்பும் தலைவர் காமராசர்

 நான் விரும்பும் தலைவர் காமராசர் என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம். 

குறிப்புச்சட்டம்

  • முன்னுரை
  • இளமைக்காலம்
  • கல்விப் பணி
  • நிறைவேற்றிய பிற திட்டங்கள் 
  • முடிவுரை

முன்னுரை: 

கர்மவீரர், கறுப்பு காந்தி என்று அழைக்கப்படும் காமராசர் மிக உயர்ந்த தமிழகத்துக்கு அடித்தளம் அமைத்தவர் ஆவார். அவரால் ஏழைகள் கல்விக்கண் திறந்தனர்.பல தலைவர்களை உருவாக்கியதால் பெருந்தலைவர் என்றழைக்கப்பெற்ற காமராசரை அறிவது மாணவர் கடமைகளுள் ஒன்றாகும். 

இளமைக்காலம்: 

காமராசர் விருதுநகரில் 15.07.1903 ஆம் ஆண்டு குமாரசாமிக்கும் சிவகாமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார்.அவரது இயற்பெயர் காமாட்சி என்பதாகும். தனது பள்ளிப் படிப்பைசத்ரிய வித்யாசாலா பள்ளியில் தொடங்கினார். வறுமை காரணமாக ஆறாம் வகுப்பு வரையே கல்வியைக் கற்க முடிந்தது. தந்தை இளமையிலேயே மறைந்ததால் தாய்மாமன் வீட்டிலேயே வளர்ந்தார். அங்கிருக்கும்போது தேசத் தலைவர்களின் பேச்சால் கவரப்பட்டு அரசியலிலும், சுதந்திரப் போராட்டங்களிலும் கலந்துகொண்டார்.  பின்னர் காங்கிரசில் இணைந்தார் 1954 ஆம் ஆண்டு தமிழக முதல்வரானார் 

கல்விப்பணி: 

பள்ளிகளில் ஏற்றத் தாழ்வின்றிக் குழந்தைகள் கல்வி கற்கச் சீருடைத்திட்டத்தை அறிமுகம் செய்தார்  மாணவர்கள் உயர்கல்வி பெறப் பல கல்லூரிகளைப் புதிதாகத் தொடங்கினார் 

நிறைவேற்றிய பிற திட்டங்கள்:

காமராசர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் மூடப்பட்டிருந்த ஆறாயிரம் தொடக்கப்பள்ளிகளை உடனடியாகத் திறக்க ஆணையிட்டார்.அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்விக்கான சட்டத்தை இயற்றினார். மாணவர்கள்பசியின்றிப் படிக்க மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். ஒன்பது நீர்ப்பாசனத்திட்டங்களை நிறைவேற்றினார்.கிண்டி அம்பத்தூர், இராணிப்பேட்டை போன்ற இடங்களில் தொழிற்சாலைகளை அமைத்தார்.நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத் தொழிற்சாலை, சர்க்கரை ஆலை, சிமெண்ட் தொழிற்சாலை, மேட்டூர் காகிதத் தொழிற்சாலைகளை நிறுவினார்.

முடிவுரை:

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் 
தெய்வத்துள் வைக்கப் படும்"

என்ற குறளுக்கேற்ப தனது பன்னிரண்டாம் வயது முதல் 02.10.1975 ஆம் ஆண்டு மறையும் வரை உண்மையாய் உழைத்தார். தனக்கென எதையும் சேர்க்காமல் மறைந்த காமராசரைப் போற்றுவோம்; நற்பணி ஆற்றுவோம்.

2 Comments

Previous Post Next Post