ஜோதிடத்தில் எட்டாம் அதிபதி
ஒவ்வொரு லக்னத்திற்கும் எட்டாம் அதிபதி ஏற்படுத்தும் பாதிப்புகளை பற்றி இப்போது பார்ப்போம்.
மேஷம் மற்றும் கன்னி லக்னம்
மேஷம் மற்றும் கன்னி இலக்கத்திற்கு செவ்வாய் எட்டாம் அதிபதியாக வருவார்.செவ்வாய் எட்டாம் அதிபதியாக வருவதால் அசையா சொத்து, வாகனம் சம்பந்தமான முடிவுகள் தவறாக இருக்க வாய்ப்புள்ளது.
ரிஷப , மற்றும் சிம்ம லக்னம்
ரிஷபம் மற்றும் சிம்ம இலக்கணத்திற்கு குரு எட்டாம் அதிபதியாக வருவார்.திருமண விஷயம், வாழ்க்கை துணையை தேர்வு செய்வதில், தங்க நகை வாங்குவது சம்பந்தமான முடிவுகள் தவறாக இருக்க வாய்ப்புள்ளது.
மிதுன மற்றும் கடக லக்னம்
மிதுன மற்றும் கடக லக்னத்திற்கு சனீஸ்வரர் எட்டாம் அதிபதியாக வருவார்.தொழில் சார்ந்த முடிவுகள் , அதிலும் திருமணத்திற்கு பிறகு எடுக்கும் தொழில் சார்ந்த முடிவுகள் தவறாகவே இருக்கிறது.
துலா மற்றும் மீன லக்னம்
துலாம் மற்றும் மீன இலக்கணத்திற்கு சுக்கிரன் எட்டாம் அதிபதியாக வருவார்.பணம், வெள்ளி ஆபரணம், இளம்பெண்கள் தொடர்பான விஷயங்களில் எடுக்கின்ற முடிவுகள் தவறாக இருக்க வாய்ப்புள்ளது.
தனுசு லக்னம்
தனுசு இலக்கணத்திற்கு சந்திரன் எட்டாம் அதிபதியாக வருவதால்.சீரான மனநிலை இருக்காது அடிக்கடி குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.மன அழுத்தம், விரக்தி, மன கோளாறுகள், தம்பதி ஒற்றுமை போன்ற காரியங்களில் தவறான முடிவுகள் ஏற்படும் நிலை.ஏதேனும் முடிவுகள் எடுக்கும் போது பெரியவர்களை கலந்தாலோசிப்பது நல்லது.
விருச்சிக மற்றும் கும்ப லக்னம்
விருச்சிகம் மற்றும் கும்ப இலக்கிணத்திற்கு புதன் எட்டாம் அதிபதியாக வருவதால் ஆவணம் , பத்திரம், கையெழுத்து போன்ற காரியங்களில் கூடுதல் கவனம் தேவை. இல்லையென்றால் தசா புத்தி சம்பந்தப்படும் காலங்களில் சட்ட ரீதியான சிரமங்களை மேற்கொள்ள நிர்பந்தம் ஏற்படும்.
மகர லக்னம்
மகர இலக்கிணத்திற்கு சூரியன் எட்டாம் அதிபதியாக வருவதால் அதிகாரம், தோரணை, தான் தான் பெரியவன், தலைவன் எனும் எண்ணம்,கௌரவம் எதிர்பார்த்து ஏமாந்து போகுதல் போன்ற காரியங்களில் எடுக்கும் முடிவுகளில் கவனம் தேவை.
Absolutely correct for mesha lagnam....
ReplyDeleteBoth choice of house and vehicles went wrong...