10 ஆம் வகுப்பு படிக்கும் போதே பெரும்பாலும் அணைவரும் வங்கி கணக்கை தொடங்கி விடுவதால் அப்போது நாம் போடும் கையெழுத்திற்கும் கல்லூரி முடித்த பிறகு நாம் போடும் கையெழுத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். இதனால் வங்கியில் பணம் எடுக்கும் போது பழைய கையெழுத்தை போல் இல்லை என்று நிராகரித்து விடுவார்கள். இதனால் கையெழுத்தை நாம் மாற்ற வேண்டியது அவசியமாகிறது. வங்கி கிளையில் கையெழுத்தை மாற்ற வங்கி மேலாளருக்கு எவ்வாறு கடிதம் எழுதுவது என்று இப்போது பார்ப்போம்.(இங்கு கொடுக்கப்பட்டுள்ள பெயர் மற்றும் முகவரி உதாரணத்திற்கு மட்டுமே)
அனுப்புநர்
முத்து,
2/33, எழில் நகர்,
விருதுநகர்.
பெறுநர்
வங்கி மேலாளர் அவர்கள்,
இந்தியன் வங்கி,
விருதுநகர்.
ஐயா,
பொருள்: வங்கி கணக்கில் கையெழுத்தை மாற்றக்கோருதல் தொடர்பாக.
வணக்கம் நான் தங்கள் வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளேன். எனது சேமிப்பு கணக்கு எண்:------. நான் தங்கள் வங்கியில் 2014 ஆம் ஆண்டு சேமிப்பு கணக்கு தொடங்கினேன். அப்போது எனக்கு வயது 16. இப்போது எனக்கு 22 வயது ஆகிவிட்டது. எனவே எனது கையெழுத்தில் மாற்றம் உள்ளது. எனது தற்போதைய கையெழுத்தை வங்கி தரவுகளில் சேர்க்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.
எனது கையெழுத்து
- ----
- ----
- ----