ஜாதகத்தில் குரு அமர்ந்த இடத்தின் பலன்கள்

ஜாதகத்தில் குரு அமர்ந்த இடத்தின் பலன்கள்.இவை அனைத்தும் பொதுப்பபலனே.லக்ணம் மற்றும் கிரகம் நின்ற இராசியை பொறுத்து பலன்கள் மாறுபடும்.

லக்னத்தில் குரு இருந்தால்:

லக்கனத்தில் குரு இருந்தால் பார்த்தவுடன் அனைவரும் வணக்கம் வைப்பார்கள். பெரிய மனித தோரணை இருக்கும். பணத்தை விட கௌரவத்திற்கு முக்கியத்துவம் தருபவராக இருப்பார்.

இரண்டாம் பாவத்தில் குரு இருந்தால்:

2 - ல் குரு இருக்க நீதிமான், நிதானமான பேச்சு, அரசு பணி அமையும், சொத்து சேர்க்கை ஏற்படுத்தும். முகம் கலையாக இருக்கும். பாலகல்வி நன்றாக இருக்கும்.

மூன்றாம் பாவத்தில் குரு இருந்தால்:

3 -இல் குரு இருக்க வாழ்கை போராட்டம், நிதானமான தைரியம், உடன்பிறந்தார்க்கு நன்மை. நல்ல தொலைபேசி வைத்துக் கொள்வதில் விருப்பம். சமூகத்தில் நல்லவர் என்ற விளம்பரம் கிடைக்கும்.

நான்காம் பாவத்தில் குரு இருந்தால்:

4 -இல் குரு இருந்து கெட்டிருந்தால் தாயின் உடல் நிலை பாதிக்கும் சொத்து சேர்க்கை, வாகன யோகம் உண்டு. தாய் கடவுள் பக்தி உள்ளவராக இருப்பார்.

ஐந்தாம் பாவத்தில் குரு இருந்தால்:

5 -இல் குரு இருக்க நல்ல புத்திரர்., புத்திநுட்பம் நிறைந்தவர், பூர்விக சொத்து வந்து சேரும். குல தெய்வ ஆசிர்வாதம் இருக்கும்.

ஆறாம் பாவத்தில் குரு இருந்தால்:

6 - இல் குரு பகைவர்களை போராடி வெல்லவார், பணப்பிரச்னை, சத்ருகள் உண்டு. 

ஏழாம் பாவத்தில் குரு இருந்தால்:

7 -இல் குரு இருக்க. மனைவி சொல் கேட்பவர், சிறந்த வியாபாரி. பங்கு மற்றும் தங்கவியாபாரம்.செய்பவர்.

எட்டாம் பாவத்தில் குரு இருந்தால்:

8 -இல் குரு தீர்க்க ஆயுள், அடிமை வேலை, தம் இனத்தவர்களால் தூற்றப்படுவார்.

ஒன்பதாம் பாவத்தில் குரு இருந்தால்:

9 - குரு நிற்க சகல வழிகளிலும் நன்மை உண்டாகும். பூர்வீகத்தை விட்டு வெளியேறுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

பத்தாம் பாவத்தில் குரு இருந்தால்:

10- குரு நிற்க. ஆசிரியர், கல்லூரி பேராசிரியர், வங்கியில் நல்ல வேலை கிடைக்கும்.

பதினொன்றாம் பாவத்தில் குரு இருந்தால்:

11 - குரு நிற்க அனைத்து வகையில் லாபம். லக்ன அசுபராக இருந்தாலும் தீமைகள் குறைந்த அளவே நடக்கும்.

பன்னிரண்டாம் பாவத்தில் குரு இருந்தால்:

12 -- குரு நிற்க வெளிநாட்டு தொடர்பு, தெய்வீக கணவுகள் வரும். குரு கெட்டிருந்தால் தூக்கமின்மை ஏற்படும்.

Post a Comment

Previous Post Next Post