நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒரு அர்த்தம் உள்ளது.அந்த கனவுகளுக்கான பலன்களை இப்போது பார்ப்போம்.
இடி விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
தன் காதுகளில் இடி விழுந்து, செவிடாகி விட்டது போலக் கனவு கண்டால், வரப்போகும் கஷ்டங்களைக் குறிக்கும்.
இடியானது மற்றவர்களின் மீது விழுந்து, அவர்கள் காது செவிடாவதாகக் கனவு கண்டால், நண்பர்களுக்கோ, சுற்றத்தினருக்கோ வரக்கூடிய கஷ்டத்தை எச்சரிப்பதாகும். இடி இடித்துக் கொண்டும், மின்னல் பளிச்சிட்டு மின்னிக் கொண்டும், பெருமழை பெய்து கொண்டும் இருக்கும் பொழுது தான் இடியிலிருந்து தப்பி விட்டதாகக் கனவு கண்டால், கஷ்டங்களிலிருந்து விடுபடுவதற்கு வாய்ப்பு ஏற்படும். மின்னல்கள் மின்னிக் கொண்டும் இடிகள் பயங்கரமாக இடித்துக் கொண்டு மிருக்குமானால், நீங்கள் கஷ்டங்களுக்கும் ஆபத்துகளுக்கும் ஆளாக நேரும். உங்களுடைய நேர்மையான நண்பர்களே உங்களைக் காட்டிக் கொடுப்பார்கள். துரோகஞ் செய்வார்கள். இத்தகைய கனவைக் கண்ட பிறகு நீங்கள் நண்பர்களிடம் பழகும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நண்பர்கள் சற்று விரோதமாக நடந்தாலும் நட்பை விட்டு விட்டு ஒதுங்கிக் கொள்ளுங்கள்.
சற்று தூரத்தில் இடி இடித்து மின்னல் மின்னுவதைப் போலக் கனவு கண்டிருந்தீர்களானால், உங்களை பயமுறுத்தும் விஷயங்களில் வெற்றியடைவீர்கள். வியாபாரத்தில் வெற்றியடைந்து மிகவும் செல்வந்தராவீர்கள். உங்கள் காதலனோ, காதலியோ எவ்வளவுதான் பொறாமைப்படக் கூடியவராகவோ பயம் தரக்கூடியவராகவோ இருந்தாலும் அவரை நீங்கள் மணந்து மகிழ்ச்சியாக வாழ்வீர்கள்.
எறும்புகளை கனவில் கண்டால் என்ன பலன்?
எறும்புகள் சாரியாகக் கோடு போட்டது போலச் செல்லுவதாகக் கனவு கண்டால், வெகு தூரத்திலுள்ள ஊர் அல்லது நகரத்திற்குச் சென்று சுகமாக தன் குழந்தைகளுடன் வாழ்வார்கள். வியாபாரிகள் இந்தக் கனவைக் கண்டால், வியாபாரம் விருத்தியடையும். எறும்புகள் வரிசையாகச் செல்லாமல் சிதறி கோணலும் மாணலுமாகச் செல்வதாகக் கண்டால், இடையூறுகள் தோன்றும். எறும்புகளும் ஈசல்களுமாகக் கண்டால் பெரிய நகரத்தில் சென்று அங்கு எண்ணற்ற பிள்ளை குட்டிகளும் பெரிய குடும்பமாக வாழ்வீர்கள். தொழிலதிபராயின் லாபம் குவியும். காதலிப்பவர்கள் இவ்வாறு கனவு கண்டால், விரைவில் திருமணம் நடக்கும். குடும்பம் பெரியதாகும். வியாபாரிக்கு சுதந்திரமாக இயங்கும் வாய்ப்புகளுண்டாகும். எறும்புகள் உணவுப் பொருள்களை தூக்கிச் செல்வதாகக் கனவு கண்டால், எடுத்த காரியங்கள் நிறைவேறும். வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். எறும்புகளை பல்லி விழுங்குவதாகக் கண்டால், ஆபத்துகள் உண்டாகும். நோயாளிகள் எறும்புகளைக் காலதாமதமாகும். கனவில் கண்டால், நோய் குணமாகக் காலதாமதமாகும்.