செவ்வாய், சனீஸ்வரர் சேர்ந்திருந்தாலோ அல்லது ஜாதகத்தில் ஒரு குறிப்பிட்ட பாவத்தை இருவரும் இணைந்து பார்த்தாலோ ஏற்படும் பலன்களை இப்போது பார்ப்போம்.
செவ்வாய், சனீஸ்வரர் இணைந்து இருப்பதன் பலன்:
பிறந்த ஜாதகத்தில் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்ட தன்மைகளை கொண்ட சனியும் செவ்வாயும் இணைந்து இருந்தாலோ இவை இரண்டும் ஏதேனும் ஒரு பாவத்தை தொடர்பு கொண்டாலோ கீழ்கண்ட பொதுப்பலனை அந்த ஜாதகர் அனுபவிக்க நேரும்.
லக்னத்திற்கு 1,2,4,7,8,12 ல் செவ்வாய் சனி இணைந்து இருந்தால் காலதாமத திருமணத்தை தரும்.சிலருக்கு 40 வயது வரை திருமணம் ஆகாத நிலையும், சிலருக்கு திருமணம் ஆகி பிரச்சனையும், வேதனையுமாக இருக்கும்.சிலருக்கு மணமுறிவு ஏற்படும்.
சரியான பொருத்தம் இல்லாத வரனை தேர்வு செய்தால் வாழ்நாள் முழுவதும் பேராட்டமாக இருக்கும்.
பொதுவாக சனி,செவ்வாய் இணைந்த சாதகருக்கு ஒரு பிரச்சனை முடிந்தால் புது பிரச்சணை ஆரம்பமாகும்.
விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது
சனியும்,செவ்வாயும்இணைந்து, பார்வயிட்ட இடங்களுக்கு உரிய உறுப்புகளில் அறுவை சிகிச்சை அல்லது நோய் ஏற்படும்.(சனீஸ்வரர் தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களையும், செவ்வாய் தான் இருக்கும் இடத்தில் இருந்து 4,7,8 ஆம் இடங்களையும் பார்வை செய்வார்கள் என்பதை நாம் அறிந்ததே)
பழமையை விரும்புவார்கள்.(பழமையான பண்னை வீடு/வீடு/வாகனம்/பொருட்கள்)
போரட்டமான வாழ்க்கை இருந்தாலும் சலிப்படையாமல் போராடி வெற்றி பெறுவார்கள்.
சுயஜாதக அமைப்புபடி தொழில் அதிபர்களாக சிலரும்,பெரிய இயந்திரங்களை கொண்ட தொழிற்சாலையில் சிலர் பணி புரிபவர்களாகவும் இருப்பார்கள்.
விடாமுயற்சி கொண்ட இவர்கள் எந்த ஒரு காரியத்திலும் போராட்டத்திற்கு பின்பு அக்காரியத்தில் வெற்றியை அடைந்தே தீருவார்கள்.
வீடு சொத்துகளில் பிரச்சனை அல்லது கடன் இருக்கும்.
விதிவிலக்குகள்:
- ஏதேனும் ஒரு கிரகம் பரிவர்த்தனை ஆவது
- ஏதேனும் ஒரு கிரகம் வக்ரம் அடைவது.
- ஏதேனும் ஒரு கிரகம் நீசம் அடைவது
- லக்ன சுபர்கள் இவர்களை பார்வை செய்வது.
போன்ற நிலைகளில் பலன் மாறுபடும்.