புத்தகம் வேண்டி உறவினர் ஒருவருக்கு கடிதம் எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.
உறவுமுறை கடிதம்
21, அண்ணா நகர்,
விருதுநகர்.
நாள்:17/09/2021.
அன்புள்ள மாமாவுக்கு,
உங்கள் அக்கா மகன் முத்து எழுதும் கடிதம். நானும் என் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமாக இருக்கின்றோம். அதுபோல தங்கள் நலத்தையும் அத்தையின் நலத்தையும் அறிய விரும்புகிறேன். எங்கள் ஆசிரியர் கவிஞர் சக்தி ஜோதி எழுதிய எனக்கான ஆகாயம் என்ற நூல் பற்றிக் கூறினார். அந்நூலில் அவர் சொன்ன சில கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த நூல் முழுமையும் நான் வாசித்துப் பார்க்க ஆசைப்படுகிறேன், விருதுநகரில் அந்நூல் கிடைக்கவில்லை. எனவே, மதுரையில் உள்ள புத்தக அங்காடிகளில் கிடைக்கும். அந்நூலை வாங்கி எனக்கு அனுப்பும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
பெ.முத்து
உறைமேல் முகவரி:
பெறுநர்:
சங்கர்,
2/44, பெரியார் நகர்,
மதுரை