தேசிய அமைப்புச் சாரா தொழிலாளர்கள் (NDUW) இலவச பதிவு:
நமது இந்தியாவில் 43.7 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களை முறையாக கண்டறிந்து நலத்திட்டங்கள் மற்றும் வேலை வாய்ப்பினை உருவாக்கும் பொருட்டு தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம் இப்பதிவினை செயல்படுத்துகிறது. எனவே அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைவரும் பதிவு செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அமைப்பு சாரா தொழிலாளர்கள் உதாரணத்திற்கு
- சிறுகுறு விவசாயிகள்
- காய்கறி மற்றும் பழ வியாபாரிகள்
- விவாசய கூலிகள்
- லேபிள் மற்றும் பாக்கிங் செய்பவர்கள்
- செய்தித்தாள் போடுபவர்கள்
- ஆட்டோ டிரைவர்கள்
- பட்டு வளர்ப்பு தொழிலாளர்கள்
- குத்தகக்காரர்கள்
- கட்டுமான தொழிலாளர்கள்
- வீடு வேலை செய்பவர்கள்
- நெசவாளர்கள்
- துப்பரவு பணியாளர்கள்
- தச்சு வேலை செய்பவர்கள்
- நூறு நாள் வேலை செய்பவர்கள்
- கால்குவாரி தொழிலாளர்கள்
- மர ஆலை தொழிலாளர்கள்
- நடைபாதை வியாபாரிகள்
- உள்ளூர் கூலிதொழிலாளர்கள்
- பால் ஊற்றும் விவசாயிகள்
- முடி திருத்தும் தொழிலாளர்கள்
- புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
மற்றும் பல
தகுதி:
- 16 வயது முதல் 59 வயதிற்குள் இருக்க வேண்டும்
- வருமான வரி செலுத்துபவராக இருக்க கூடாது
- PF ESI பணியாளராக இருக்க கூடாது
- அமைப்பு சாரா தொழிலாளராக மட்டுமே இருக்க வேண்டும்
பதிவு செய்ய தேவையான ஆவணங்கள்
கட்டாயம்
- ஆதார் அட்டை
- வங்கி கணக்கு புத்தகம்
- மொபைல் எண்
கட்டாயமில்லை
- கல்வி சான்றிதழ்
- வருமான சான்றிதழ்
- ஜாதி சான்றிதழ்
- தொழில்திறன் சான்றிதழ்
பயன்கள்
- பதிவுகளின் அடிப்படையில் சமூக நலத்திட்டங்களை அமைச்சகம் / அரசாங்கம் அமல்படுத்தும்
- PM SURAKSHA (விபத்து காப்பீடு) ஒரு வருடத்திற்கான சந்தா விளக்கு செய்யப்படும்.
- தகுந்த வேலை வாய்ப்புகளை உருவாக்கிட கொள்கைகளை வகுக்க உதவி புரியும்
- பதிவு செய்தவுடன் நிரந்தர பதிவு எண் மற்றும் அடையாள அட்டை உடனடியாக வழங்கப்படும்
மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள
CSC பொது சேவை மையத்தை அனுகவும்
Tags:
govt scheme