மத்திய மற்றும் மாநில வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சகம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி இப்போது பார்ப்போம்.
{tocify} $title={Table of Contents}
1)கிசான் விகாஸ் பத்ரா (KVP)
துவக்கம்:
1988-இல் இந்திய அஞ்சல் துறையால் துவக்கப்பட்டது. (செயல்பட்ட காலம் : 1988-2011, மீண்டும் துவக்கம் : 2014)
நோக்கம்:
சேமிப்புப் பத்திரத் திட்டம்
குறிக்கோள்:
பல்வேறு பணமதிப்புகளில் அஞ்சல் அலுவலகங்களில் இருந்து பத்திரங்களை வாங்குவதன் மூலம் வரம்பற்ற முதலீடுகளை எளிதாக்குதல் மற்றும் வசதிப் படுத்துதல்,
அமல்படுத்தும் நிறுவனம்:
இந்தியா அஞ்சல் துறை
பயனாளிகள்: ஏழை விவசாயிகள்
திட்ட விளக்கம்:
- அஞ்சலகத்தில் ரூ.1,000, ரூ.5,000, ரூ.10,000 மற்றும் ரூ.50,000 மதிப்புடைய முதலீட்டுப் பத்திரங்கள் கிடைக்கும்.
- இது ஆண்டிற்கு 8.7% வட்டியை அளிக்கும்.
- 100 மாதங்களில் (8 ஆண்டுகள் மற்றும் 2 மாதங்கள்) முதலீட்டின் மதிப்பு இரு மடங்காக உயரும்.
- இடைப்பட்ட காலத்தில் முதலீட்டுப் பத்திரத்தின் பணம் வேண்டுமெனில் 30 மாதங்கள் (2 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள்) கழித்து தான் பெற முடியும்.
2)கிரிஷி அம்தானி பீமா யோஜனா
துவக்கம்:
ஜூன் 2, 2014 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.
நோக்கம்:
வேளாண் காப்பீடு
குறிக்கோள்:
எதிர்பாரா வானிலை நிகழ்வுகள் நிகழ்வுகள் அல்லது வேறு பிற காரணங்களினால் தங்களது வேளாண் உற்பத்திப் பொருட்கள் பாதிக்கப்படும் பொழுது இத்திட்டமானது உழவர்களுக்கு உதவும்.
பயனாளிகள்:
சிறு மற்றும் குறு விவசாயிகள்
3)பிரதான் மந்திரி கிரிஷி சின்சாய் யோஜனா
துவக்கம்:
2015-2016 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.
திட்டகாலம்:
2015-2016 முதல் 2019-2022 வரை
நோக்கம்:
நுண் நீர் பாசனம்
குறிக்கோள்:
உறுதி செய்யப்பட்ட நீர்பாசனத்தின் கீழ் வேளாண் பயிர் செய்யக்கூடிய பகுதிகளை விரிவுப்படுத்துதல், வேளாண்மையில் நீர் பயன்பாட்டு திறனை அதிகரித்தல் மற்றும் வேளாண்மையில் நீடித்த பாதுகாப்பு நடைமுறைகளை அறிமுகப்படுத்துதல். பண்ணைகளில் நீருக்கான அணுகலை மேம்படுத்துதல்.
நிதியளிப்பு:
மத்திய மற்றும் மாநில அரசுகளினால் பகிர்ந்தளிக்கப்படும் நிதியானது நபார்டு வங்கி மூலம் அளிக்கப்பட்டு வருகிறது.
திட்டக்கூறுகள்:
“ஒவ்வொரு நீர் துளிக்கும், அதிகப்படியான விளைச்சல்"
செயல்படுத்தும் நிறுவனம்:
மத்திய வேளாண்மை அமைச்சகம், மத்திய நீர் வளஅமைச்சகம், மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம்.
4)பரம்பராகத் கிரிஷி விகாஸ் யோஜனா
துவக்கம்:
2015 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.
நோக்கம்:
இயற்கை அங்கக வேளாண்மை
குறிக்கோள்:
சுற்றுச்சூழலுக்கு உகந்த வேளாண் சாகுபடி முறையை ஏற்றுக் கொண்டு அதனை மேற்கொள்ள விவசாயிகளை ஊக்குவித்தல். வேளாண்மையில் விளைச்சலை அதிகரிக்க இராசயனங்கள் மற்றும் செயற்கை உரங்கள் மீதான விவசாயிகளின் சார்புடைமையை குறைத்தல்.
அமல்படுத்தும் நிறுவனம்:
மத்திய வேளாண்மை அமைச்சகம்
திட்ட விளக்கம்:
இது ஓர் திரள் தொகுப்பு அணுகுமுறை (Cluster approach) இது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இயற்கை அங்கக வேளாண்மைக்கான அனைத்து திட்டங்களையும் உள்ளடக்கியதாகும்.
5)FMD முக்தா பாரத்
துவக்கம்:
09 ஆகஸ்ட், 2016 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது
நோக்கம்:
கோமாரி நோயினை ஒழித்தல்
திட்ட விளக்கம்:
கோமாரி நோயானது ஓர் தொற்றுநோயாகும். ஒரு சில வேளைகளில் இது உயிர் கொல்லி நோயாகும். இந்நோயானது உள்நாட்டு மற்றும் காட்டு எருமைகள் உள்பட வெட்டுக் குளம்புடைய விலங்குகளை பாதிக்கின்றது.
6)அலங்கார மீன்கள் வளர்ப்புத் திட்டம்
துவக்கம்:
09 மார்ச் 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது
நோக்கம்:
நாட்டின் அலங்கார மீன் வளர்ப்புத் துறையின் ஆற்றலை வெளிக்கொணர்தல்.
குறிக்கோள்:
- அலங்கார மீன்களின் வர்த்தகம் மற்றும் ஏற்றமதி வருவாயை அதிகரித்தல்.
- ஊரகம் மற்றும் நகர்ப்புற மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்.
- வளரும் இலாபகரமான செயல்பாடாக அலங்கார மீன்கள் வளர்ப்பினை உருவாக்க நவீன தொழில் நுட்பங்கள் மற்றும் புத்தாக்கங்களை பயன்படுத்துதல்.
நிதியளிப்பு:
நீலப் புரட்சித் திட்டத்தின் மேல்வரியின் கீழ் இத்திட்டத்தில் நிதியளிப்பு முறை உள்ளது.
அமல்படுத்தும் அமைப்பு:
தேசிய மீன் வளர்ப்பு மேம்பாட்டு வாரியமானது மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்களின் மீன் வளர்ப்புத் துறையின் மூலம் இத்திட்டத்தை அமல்படுத்துகின்றது.
7)பண்டிட் தீன்தயாள் உபத்யாய் உன்னத் கிரிஷி சிக்சா யோஜனா
துவக்கம்:
2016 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது
நோக்கம்:
வேளாண் கல்வியை மேம்படுத்துதல். இந்திய வேளாண் கவுன்சிலால் "வேளாண்மையில் இளைஞர்களை ஈடுபட வைத்தல் மற்றும் நிலைபெற வைத்தல்" எனும் திட்டம் ( ARYA அனுமதிக்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது கிரிஷி விக்யான் கேந்திரா (வேளாண் அறிவியல் மையங்கள்) அமைப்புகளால் செயல்படுத்தப்படுகின்றது.
8)தேசிய வேளாண் சந்தை (e-NAM)
துவக்கம்:
ஏப்ரல் 14, 2016 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது
நோக்கம்:
பல்வேறு மாநிலங்களில் உள்ள மின்-மண்டிகளை (e-mandis) இணைத்தல். தங்களது வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு சிறந்த விலையினைப் பெற விவசாயிகளை இயலச் செய்தல்.
நிதியளிப்பு:
இதற்காக வேளாண்- தொழிற்நுட்ப உள்கட்டமைப்பு நிதியமானது சிறு விவசாயிகளின் வேளாண்-வணிக கூட்டமைப்பின் மூலம் அமைக்கப்பட்டுள்ளது.
அமல்படுத்தும் நிறுவனம்:
SFAC ஆனது தேசிய வேளாண் சந்தையின் முன்னணி மேம்பாட்டாளர் அமைப்பாகும். SFAC ஆனது மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல்வாழ்வு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய வேளாண்மை,துறையின் பதிவு கூட்டுறவுச் சங்கம் மற்றும் விவசாயிகள் நல்வாழ்வுத் செய்யப்பட்ட சங்கமாகும்.
9)பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா
துவக்கம்:
2016 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது
நோக்கம்:
இத்திட்டமானது உணவுப் பயிர்கள், உணவுத் தானியங்கள் மற்றும் தோட்டப் பயிர்கள் போன்ற தடுக்க இயலாத சூழல்களினால் பாதிக்கப்படும் பொழுது உழவர்களுக்கு காப்பீடை வழங்குகிறது.
திட்ட விளக்கம:
- காரிப் பயிர்களுக்கு 2%, ரபி பருவப் பயிர்களுக்கு 1.5% என்ற வீதத்தில் ஒரே சீரான காப்பீட்டுக் கட்டணத்தை விவசாயிகள் செலுத்த வேண்டும். தோட்டப் பயிர்களுக்கு 5% செலுத்த வேண்டும். மீதி கட்டணத்தை அரசு செலுத்தும்.
- அரசு வழங்கும் மானியங்களுக்கு உச்ச வரம்பு இல்லை.
10)மண் வள அட்டைத் திட்டம்
துவக்கம்:
பிப்ரவரி 19, 2015 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது
நோக்கம்:
நாடு முழுவதும் வேளாண்மைப் பகுதியில் உள்ள மண் வளத்தின் மீது சிறப்பு கவனத்தை செலுத்துவதற்காக அனைத்து விவசாயிகளுக்கும் மண் பரிசோதனை ஆரோக்கிய அட்டையை வழங்குதல்.
நிதியளிப்பு:
மண் ஆரோக்கியம் பரிசோதனைக்கான செலவானது மத்திய மற்றும் மாநில அரசுகளிடையே 75 : 25 எனும் வீதத்தில் பகிர்ந்து கொள்ளப்படும்.
திட்ட விளக்கம் :
ஆரோக்கியமான பூமி, பசுமையான பண்ணை
11)மின் - பசுஹாத் இணைவாயில்
நோக்கம்:
கால்நடை விலங்குகளை வளர்ப்பவர்கள் மற்றும் விவசாயிகளை இணைத்தல்.
திட்ட முழக்கம்:
இந்தியாவானது உலகின் மிகப் பெரிய அளவில் கால்நடை விலங்குகளின் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. உலக கால்நடைகள் தொகையில் 14 சதவீதத்தினைக் இந்தியா கொண்டுள்ளது. எருதுகளின் தொகையில் மட்டும் உலகளவில் 53 சதவீதத்தினைக் கொண்டுள்ளது.
இந்தியாவின் உள்நாட்டு எருது இனங்களானது வெப்பச் சகிப்புத் தன்மையும், சிறு அளவிலான உணவோடு வாழும் தன்மையும், நோய் எதிர்ப்புத் திறனும் வாய்க்கப் பெற்றுள்ளன.
12)கிரிஷி விக்யான் கேந்திரா(வேளாண் அறிவியல் மையம்)
நோக்கம்:
இந்த அமைப்பின் நோக்கம் விவசாயிகளின் தொழிற்நுட்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒற்றை இட தீர்வைப் பொறிமுறையாக செயல்படுதல் மற்றும் அரசு சார தொண்டு நிறுவனம் போன்ற வேளாண்்விரிவாக்க செயல் அமைப்புகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களிடையே ஓர் இணைப்பாக செயல்படுதல் ஆகும். திட்ட விளக்கம் : நாட்டின் வேளாண் துறைக்கு பல்வேறு வகையான வேளாண் பண்ணை ஆதரவுத் திட்டத்தை வழங்குவதற்காக இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சிலால் உருவாக்கப்பட்ட வேளாண்மை விரிவாக்க மையங்களே கிரிஷி விக்யான் கேந்திராக்களாகும்.
13)எனது கிராமம் - எனது கவுரவம்
துவக்கம்:
2015 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது
நோக்கம்:
தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் கிராமங்களை தேர்ந்தெடுப்பர். பின் தொழிற்நுட்பம் மற்றும் பிற வேளாண் சார் அம்சங்கள் மீது உழவர்களுக்கு தகவல்களை வழங்குவர்.
அமல்பாடுத்தும் நிறுவனம்:
ஆராய்ச்சியாளர்கள் கிரிஷி விக்யான் கேந்திரா மற்றும் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை நிறுவனத்தின் உதவியுடன் செயல்படுவர்.
14)ராஷ்டிரிய கிரிஷி விகாஸ் யோஜனா
துவக்கம்:
ஆகஸ்ட் 2007 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது
நோக்கம்:
11வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தின் போது வேளாண் மற்றும் அது சார் பயன்பாட்டு துறைகளின் மேம்பாட்டின் மூலம் வேளாண்மையில் 4 சதவித வருடாந்திர வளர்ச்சியை அடைதல்.
குறிக்கோள்:
வேளாண்மை மற்றும் வேளாண்சார் பயன்பாட்டுத் துறைகளில் தங்களது முதலீடுகளை அதிகரிக்கும் மாநிலங்களுக்கு ஊக்கத் தொகைகளை வழங்குதல், வேளாண் துறையின் மேம்பாட்டிற்காக திட்டமிடல் மற்றும் திட்டங்களின் அமல்படுத்தலில் மாநிலங்களக்கு தன்னாட்சி மற்றும் நெகிழ்வுத் தன்மையை வழங்குதல்.
திட்டத்தின் தன்மை:
இத்திட்டமானது 100 சதவிதம் மத்திய அரசின் நிதியுதவித் திட்டமாகும்.
15)தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம்
துவக்கம்:
அக்டோபர் 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது
திட்டத்தின் தன்மை:
மத்திய அரசின் நிதியுதவித் திட்டம்
நோக்கம்:
நெல், கோதுமை, பருப்புகள், தானியங்கள் மற்றும் பருத்தி போன்ற வர்த்தகப் பயிர்களின் உற்பத்தியை மேம்படுத்துதல்.
இலக்கு:
11வது ஐந்தாண்டு காலத்திட்டத்தின் முடிவில் (2011-12) ஒரு நெல்லின் உற்பத்தியை 10 மில்லியன் டன்கள் அதிகரித்தல், கோதுமை உற்பத்தியை 8 மில்லியன் டன்கள் அதிகரித்தல், பருப்பு வகைகளின் உற்பத்தியை 2 மில்லியன் டன்கள் அதிகரித்தல்.
நிதியளிப்பு:
உணவுப் பயிர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி பங்களிப்பு விகிதம் 50 : 50 ஆகும். பணப் பயிர்களுக்கு மத்திய அரசு 100 சதவீதம் நிதி அளிக்கும்.
திட்டத்தின் கூறுகள்:
- NFSM - நெல்
- NFSM - கோதுமை
- NFSM - பருப்பு வகைகள்
- NFSM - தானியங்கள்
- NFSM - வர்த்தகப் பயிர்கள்
16)பருவநிலை நெகிழ்திறன் வேளாண்மை மீதான தேசிய துவக்கம்
துவக்கம்:
பிப்ரவரி 2011 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது
துவங்கிய அமைப்பு:
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில்
நோக்கம்:
பருவ நிலை மாற்றம் நிகழும் இந்த சகாப்தத்தில் நீடித்த வேளாண்மைக்காக இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட மூல ஆதாரங்களின் மேலாண்மை மற்றும் பருவநிலை நெகிழ்திறன் வேளாண்மைத் தொழில் நுட்பங்களின் பயன்பாட்டின் மூலம் உழவர்களை சுய-சார்பு உடையவர்களாக மாற்றுதல்
17)சிறு விவசாயிகளின் வேளாண் - வணிக கூட்டமைப்பு
துவக்கம்:
1994 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது
நோக்கம்:
நிதியியல் நிறுவனங்களுடனான நெருங்கிய தொடர்புடன் துணிகர மூலதன உதவித் திட்டத்தின் (Venture Capital Assistance Scheme) வேளாண்மையில் தனியார் முதலீடுகளை ஊக்குவிப்பதன் வழி வேளாண்-வணிக-முயற்சிகளை எளிமைப்படுத்துதல் மற்றும் அவற்றை வசதிபடுத்துதல்.
18)மீன் குஞ்சுகள் வளர்ப்புத் திட்டம்
துவக்கம்:
11 மார்ச் 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது
திட்டகாலம் :
2020-21 வரை
நோக்கம்:
நீலப் புரட்சியின் நோக்கங்களை அடைதல்.
குறிக்கோள்:
- இந்தியாவில் மீன் வளர்ப்புத் துறையின் மேலாண்மை மற்றும் முழுமையான வளர்ச்சியை இயலச் செய்தல்
- மீன் குஞ்சுகள் வளர்ப்பு உள் கூட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துதல் மற்றும் மீன்குஞ்சுகள் வளர்ப்பு குளம் மற்றும் குஞ்சு பொரிப்பகங்களின் நிறுவலை வசதிப்படுத்துதல்.
இலக்கு:
மீன் உற்பத்தி அளவை 2014-15ஆம் ஆண்டின் உற்பத்தி அளவான 10.79 மில்லியன் மெட்ரிக் டன் என்ற அளவிலிருந்து 2021-21ஆம் ஆண்டில் 15 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரித்தல்.
19)வேளாண்மைக்கு விண்வெளித் தொழில் நுட்பங்களை பயன்படுத்துதல் மீதான தேசியத் திட்டம்
குறிக்கோள்:
- வேளாண் வள மேலாண்மை
- பேரிடர் கண்காணிப்பு,தணிப்பு, மற்றும் செயற்கை கோள் தொலைத் தொடர்பு
- பயிர் மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு
- வழிகாட்டு அமைப்புகளின் பயன்பாடுகள்
நோக்கம்:
வேளாண் மேலாண்மை கண்காணிப்பு மற்றும் வரைபடமிடலுக்கான விண்வெளி மற்றும் புவி-நிலப்பரப்பு கருவிகளின் ஒருங்கிணைந்த பயன்பாடு
20)சமன் திட்டம்
துவக்கம்:
02 ஆகஸ்ட் 2016 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது
நோக்கம்:
தோட்டக்கலைத் துறைக்கு உத்திசார் வளர்ச்சியினை வழங்குதல். அதன் மூலம் உழவர்களின் வருவாயைப் பெருக்குதல். அமல்படுத்தும் நிறுவனம் தொலை உணர்வுத் தொழில் நுட்பங்களின் பயன்பாட்டின் மூலம் மூலம் தேசிய பயிர் முன்அறிவிப்பு மையம் முன்அறிவிப்பு மையம் இத்திட்டத்தை செயல்படுத்துகின்றது.
திட்டக் கூறுகள்:
- பயிர் வளர்ப்பினை தீவிரப்படுத்துதல்
- பழத் தோட்டங்களை புத்துயிரூட்டல்
- அக்வா - தோட்டக்கலை
21)வேளாண் விரிவாக்கம் மற்றும் தொழில்நுட்பத் தேசிய திட்டம்
திட்டத்தின் கூறுகள்:
விதை மற்றும் நடவுப் பொருட்கள் மீதான துணைத் திட்டம்
நோக்கம்:
விவசாயிகளுக்கு மேம்படுத்தப்பட்ட வேளாண் உழவு நடைமுறைகள் மற்றும் பொருத்தமான தொழில்நுட்பங்கள் வழங்குவதை இயலச் செய்ய வேளாண் விரிவாக்க அமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் மறுக்கட்டமைத்தல்.
குறிக்கோள்:
விவசாயிகளிடையே நவீன தொழில்நுட்பங்களை பரப்புவதற்காக புதிய நிறுவன ஏற்பாடுகளின் மூலம் உழவர்களால் மேற்கொண்டு செல்லப்படும் மற்றும் உழவர்களின் பொறுப்புடைமைக் கொண்ட வேளாண் விரிவாக்க அமைப்பை உருவாக்குதல்.
22)ச-ராகம் (e-RaKAM)
தங்களது வேளாண் உற்பத்திப் பொருட்களை மின்-ஏலத்தின் மூலம் விற்பனை செய்யும் வகையில் உழவர்களை இயலச் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஓர் டிஜிட்டல் இணையவாயிலே e-RaKAM ஆகும்.
நோக்கம்:
நாடு முழுவதும் தங்களது வோளண் விளைப் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்வதற்கு விவசாயிகளக்கு உதவுதல்.
நிர்வாக அமைப்பு:
மத்திய சேமிப்புக் கிடங்கு கழகம்.
23)ராஷ்டிரிய கோகுல் திட்டம்
நோக்கம்:
நன்கு கவனம் செலுத்தப்பட்ட மற்றும் அறிவியல் பூர்வ முறையில் உள்நாட்டு கால்நடை இனங்களின் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு.
குறிக்கோள்:
உள்நாட்டு கால்நடை இனங்களின் மரபியற் கட்டமைப்பினை அதிகரிக்க உள்நாட்டு கால்நடைகளை பாதுகாத்தல் மற்றும் அவற்றினை மேம்படுத்துதல்.
- பால் உற்பத்தித் திறனை மேம்படுத்துதல்
- இயற்கை சேவைகளுக்காக நோய்களில்லா உயர் மரபியற் பண்புடைய காளைகளை விவசாயிகளுக்கு வழங்குதல்
அமல்படுத்தும் அமைப்பு:
கால்நடைகள் அபிவிருத்தி வாரியத்தின் மூலம் சம்பந்தப்பட்ட மாநில அமல்பாட்டு நிறுவனங்கள் இத்திட்டத்தை அமல்படுத்துகின்றது.
நிதியளிப்பு:
100 சதவீதம் மானியம் அடிப்படையிலான நிதியளிப்பு உடையது இத்திட்டம்
24)தேசிய பால் பண்ணைத் திட்டம்
திட்ட காலம்:
2011-12 முதல் 2018-19 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது
குறிக்கோள்:
- கறவை விலங்குகளின் உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவுதல் அதன் மூலம் வேகமாக அதிகரித்து வரும் பால் தேவையை சந்திக்க பால் உற்பத்தியை அதிகரித்தல்.
- ஊரக பால் உற்பத்தியாளர்களக்கு முறை சார் பால் - பதனிடல் துறைக்கு மேம்பட்ட அணுகலை வழங்குதல்.
நிதியளிப்பு:
சர்வதேச மேம்பாட்டு சங்கம் (IDA)
25)பசுதன சஞ்சீவனி
- இத்திட்டமானது “நகுல் சுவஸ்திய பத்ரா' எனும் விலங்குகள் ஆரோக்கிய அட்டைகளைக் கொண்ட கால்நடைகள் நல்வாழ்வுத் திட்டமாகும்.
- இத்திட்டமானது கறவை விலங்குகளுக்கு தனித்துவ அடையாள எண்ணை வழங்குகின்றது. மேலும் கால்நடை நோய்களின் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தேசிய தரவுத் தளத்தை அமைக்கின்றது. மேலும் கால்நடைகள் மற்றும் அவற்றின் உற்பத்திப் பொருட்களின் வர்த்தகத்தை கண்காணிக்கின்றது.
26)இ-பசுதன் ஹாத் இணையவாயில்
உள்நாட்டு கால்நடை இனங்களின் வளர்ப்பவர்கள் மற்றும் உழவர்களை இணைப்பதற்காக எருதுகளின் உற்பத்தித்திறன் மீதான தேசியத் திட்டத்தின் கீழ் இத்திட்டம் துவங்கப்பட்டது.
27)“தரக் குறியீடு" விருதுத் திட்டம்
பால் கூட்டுறவுச் சங்கங்களினால் தயாரிக்கப்படும் பால் மற்றும் பால் பொருட்களின் தரம், தரம், பாதுகாப்பு மற்றும் தூய்மையின் மேம்பாட்டை ஊக்குவிப்பது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
ஆதரவளிப்பு அமைப்பு:
மத்திய கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி மற்றும் மீன் வளர்ப்புத் துறையின் ஆதரவோடு தேசிய பால் உற்பத்தி மேம்பாட்டு வாரியம் இத்திட்டத்திற்கு ஆதரவளிக்கின்றது.