பஞ்ச மஹாபுருஷ யோகங்கள்:
பஞ்ச மஹாபுருஷ யோகங்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
1)பத்ரயோகம்:
புதன் ஆட்சி அல்லது உச்சத்தில் லக்னத்திற்கோ அல்லது சந்திரனுக்கோ கேந்திரத்தில் நிற்பது பத்ர யோகம் எனப்படுகிறது. அறிவுக்கூர்மை, வாதத்திறமை, பல கலைகளில் கற்றுத் தேர்ச்சி போன்றவை இந்த யோகத்தினால் கிடைக்கும்.
2)ருசக யோகம்:
செவ்வாய் ஆட்சி அல்லது உச்சத்தில் நின்று லக்னத்திற்கோ அல்லது சந்திரனுக்கோ கேந்திரங்களில் இருப்பது ருசக யோகம் எனப்படும். தீர்க்காயுள், பணவருவாய், சத்ருக்களை வெல்லும் திறமை, புகழ், திடமான உடல் போன்றவை இந்த யோகத்தினால் கிடைக்கும்.
3)சசயோகம்:
சனி ஆட்சி உச்சங்களில் லக்னத்தில் இருந்தோ, கேந்திரத்தில் இருந்தோ நிற்பது சச யோகம் என்றழைக்கப்படுகிறது. தலைமைப் பண்பு, பல வேலையாட்களை வைத்திருப்பது, ஆழ்ந்த சிந்தனை என்ற நல்ல பண்புகளோடு அடுத்தவர் சொத்து களை அபகரிப்பது போன்ற தீய குணங்களும் தரும் யோகமாகக் கருதப்படுகிறது.
4)ஹம்ஸ யோகம்:
குரு ஆட்சி உச்சம் பெற்று லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திரத்தில் நிற்பது ஹம்ஸ யோகம் எனப்படும். அழகான உடலமைப்பு, நற்குணங்கள், தர்மசிந்தனை ஆகியவை ஹம்ஸ யோகத்தினால் கிடைக்கக் கூடியவை.
5)மாலவ்ய யோகம்:
சுக்கிரன் ஆட்சி உச்சம் பெற்று லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திரத்தில் நிற்பது மாலவ்ய யோகம். நல்ல தோற்றமுள்ள தேகம், வாகனம், மனைவி மக்க ளுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை, கலைகளில் தேர்ச்சி ஆகியவை மாலவ்ய யோகத்தால் பெறப்படுவது.