திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் பகுதி-1

மேஷம் முதல் துலாம் லக்னம் வரை ஒவ்வொரு லக்னகாரர்களுக்கும் திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்று இப்போது பார்ப்போம். இப்பலன்கள் பொதுப் பலன்கள் மட்டுமே. கிரகச்சேர்க்கை கிரகப்பார்வை லக்ன நிலையை பொறுத்து பலன்கள் மாறுபடும்.

மேஷ லக்கினம்

மேஷ லக்கினத்தில் பிறந்தவர்கட்கு, துலா ராசி ஏழாவது இடமாக இருப்பதால்,

மனைவி குடும்பப் பொறுப்பேற்று நடத்துவதில் அக்கறை கொண்டவர் ஆவாள், கணவனுடைய, தலையீட்டைச் சில சமயம் விரும்பமாட்டாள். இடையிடையே சிறுசிறு மனத்தாங்கல்கள் வந்து விலகும். குடும்ப கௌரவம் அமையும். திருமணத்துக்கு முன்பே வாழ்க்கைத் திட்டங்களை வகுத்திருப்பர். ஆடல் பாடல் கேளிக்கைகளில் மன விருப்புடன் இருப்பர்.

ரிஷப லக்கினம் 

ரிஷப லக்கினக்காரருக்கு, விருச்சிக ராசி ஏழாமிடமாக அமைவதால் முழுப் பொறுப்பும் மனைவியிடமே அமையும். இன்றேல், வீண் தகராறுகள் விளையும் மனைவியின் மரணம் முன்னதாக அமைய வாய்ப்புள்ளது.

ஜென்ம லக்கினமான ரிஷபத்தில், செவ்வாய் நின்றால் சீதனம் வரதட்சிணை அதிகம் கேட்பர்.மனைவியால் செல்வ ஆதாயம் பெறுவார்.

சிறு சிறு சண்டைகள் அடிக்கடி தோன்றி மறையும்.

செவ்வாயை, குரு, சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் பார்த்தால் மனைவி நல்ல தைரியசாலியாகவும் கடின உழைப்பாளியாகவும் இருப்பார்.மனைவிக்கு உடனே கிரகித்துக் கொள்ளும் திறன் அமையும். செவ்வாயைப் சனி, ராகு, சூரியன் பார்த்தால், கணவனுடன் வரிந்து கட்டிக் கொண்டு சண்டையிடத் தயாராகுவர்.

மிதுன லக்கினம்

மிதுன லக்கினக்காரருக்கு. தனுசு ஏழாமிடமாக வரும். இவர் திருமணக் காலத்தில் எதனையாவது விட்டுக் கொடுப்பார்.சமயச் சம்பிரதாயங்கள், சொந்த விருப்பு வெறுப்புகளை விட்டுக் கொடுத்தே திருமணம் அமையும்
சிலருக்குக் காதல் திருமணமாகவும் அமையலாம்.பெரியோர்களின் சம்மதமுடனேயே திருமணம் நடக்கும். 
சட்டதிட்டங்கட்குப் பணிந்தவராக இருப்பர்.கணவன் மனைவி உறவு நன்கு ஒளிரும்.சமய சம்பிரதாயங்களில் பற்றுதல் உள்ளவராயிருப்பர் தைரியமாகவும், சில சமயம் வெகுளியாகவும் இருப்பர். தாராள மனம் படைத்தவராவர். விளையாட்டுச் செயல்களில் விருப்பு இருக்கும்.குருவை சுக்கிரன், புதன் பார்த்தால், நல்ல செயல்கட்குத் தான, தருமம் செய்வர். அதிர்ஷ்டசாலியாய் இருப்பர். குருவை சனி, சூரியன், செவ்வாய் பார்த்தால் பணக் கஷ்டம் உண்டாகும்.

கடக லக்கினம்

கடக லக்கின ஜாதகர்க்கு, மகரம் ஏழாமிடமாக வரும். இவர்கட்கு வாய்க்கும் மனைவி மிக ஜாக்கிரதையாக இருப்பார். அதிகம் பேச மாட்டார்.

தாய் தந்தையர் நிர்ப்பந்தத் திருமணமாக இருக்கலாம்.தொழிலில் தடங்கல்கள் ஏற்படும்.

சிலர் வாழ்வில் பிரிவு அடிக்கடி ஏற்படும்.

எச்சரிக்கையும், ஜாக்கிரதையும் சந்தேகப் பேர்வழியாக்கும்

கணவன் மீது அடிக்கடி சந்தேகப்படுவார் , கடக லக்கினக்காரர் மனைவியின் கட்டு திட்டங்கட்கு அடங்கி யவராவர்.

சிம்ம லக்கினம்

சிம்ம லக்கினக்காரருக்கு, கும்பம் ஏழாவது ராசியாக அமையும். இவர்கட்கு உறவில் திருமணமாலதில்லை. எனினும் அன்னியோன்ய பாவம் நிலவும்.

குடும்பத்தில் எதிர்பாராத மாறுதல்கள் விவாகரத்து வரை போகும் நிலை வரும். 

கும்பத்தையோ அல்லது சனியையோ குரு. சுக்கிரன் முதலியோர் பார்த்தால் ஒரு கெடுதியும் நேராது.

கணவன் பொறுமையாக இருக்க வேண்டும். வேறு வழி இல்லை. கணவனை மீறிய வேலைகள் மனைவி செய்வார்.

கணவன் லக்கினத்தில் சூரியன் வலுத்திருந்தால் நன்று. சனீஸ்வரர் வலுத்தால் மனைவி கை ஓங்கி இருக்கும்.

கன்னி லக்கினம்

கன்னி லக்கினக்காரருக்கு மீன ராசி ஏழாமிடமாக வரும்.

திருமணம் ஏதோ ஒரு நிபந்தனையின் பேரில் அல்லது முக்கிய காரணத்தால் நடைபெறும்.

தெய்வானுகூலத்தால் தான் திருமண வாழ்வு நடந்து வரும். ஏதோ ஒருவித சிறுசிறு கவலைகள் இருவருக்குள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

சகிப்புத் தன்மையும், தியாக உணர்ச்சியும் உடைய கணவரின் பொறுமையால் வாழ்க்கை செம்மையாக நடைபெறும். பன்னிரண்டாமிடத்தில் இருக்கும் கிரகத்தால் தொல்லைகள் உண்டு. கணவன் ஒரு தெய்வீகத் துறையில் சக்தி பெறுவார்.

மனைவி சங்கீத ஞானம் உடையவராயிருப்பார் அல்லது வியக்கத்தகு பணிகள் செய்பவராவர்.

துலா லக்கினம்

துலா லக்கினத்தில் பிறந்தவருக்கு மேஷ ராசி ஏழாமிடமாக வருவதால்

மனைவி, கணவனை மிஞ்சி சில காரியங்களில் இறங்குவர்.

கணவன் மேல், சிறு சிறு விஷயங்களில் எல்லாம் பெரிதாகக் குற்றம் கண்டு பிடிப்பார்.

சிலபோது முன் யோசனையின்றி ஏதேனும் செய்து விட்டு விழிப்பார். புண்ணியவசம் பாதுகாக்கும்.

இவண் சுக்கிரன், செவ்வாயை விட வலுப்பெற்றிருந்தால், தொந்தரவுகள் அணுகாது.

செவ்வாயை குரு, சுக்கிரன், புதன் போன்ற சுபகிரகங்கள் பார்த்தால், முரட்டுக் குணமும், வெட்கமின்மையும் ஏற்படும். சில சமயம், தானே எல்லாவற்றிற்கும் காரணம் என்ற பெருந்தன்மைக் குணம் உண்டாகும்.

Related: திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் பகுதி-2

Post a Comment

Previous Post Next Post